Science and Technology : சூழலை காக்க லித்தியத்தை மறுசுழற்சி செய்யும் தேவை உள்ளது – நிபுணர்கள் விளக்கம்
Science and Technology : லித்தியம், ஜெர்மானியம் போன்ற முக்கிய வேதிப்பொருட்களை திரும்பபெறும் தொழில்நுட்பங்களை வடிவமைப்பதுடன், உலோகங்களை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பங்களையும் திறம்பட செயல்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
புவி வெப்பமடைதல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மின்னணு வாகனங்களை பயன்படுத்துவது புவிவெப்பமடைதல் பாதிப்புகளை குறைக்க உதவும். ஆனால், மின்னணு வாகனங்களுக்கு லித்திய மின்கலங்கள் தேவை.
இந்நிலையில், ஒரு டன் லித்தியத்தை தோண்டி எடுக்கும்போது 15 டன் கரியமிலவாயு வெளியாகி கார்பன் உமிழ்வை அதிகமாக்குகிறது. மேலும், லித்தியத்தை தோண்டி எடுப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளும், நிலம், நீர், காற்று, நிலத்தடி நீர் என அனைத்தும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் 2019ம் ஆண்டு 3.2 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனினும், கழிவில் 17 சதவீதம் மட்டுமே, மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் ரதீஷ் (இயக்குநர்-Centre for Materials for Electronics Technology-CMET), மின்னணுக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு இல்லாமல் பல வேதிப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்ததால் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
முதன்மை மற்றும் அடுத்த கட்ட மின்கலன்களுக்கு தேவையான லித்தியம், நிக்கல், கோபால்ட், உயர்தர மாங்கனீஸ் ஆக்ஸைட் போன்றவற்றை இன்னமும் நாம் இறக்குமதி செய்யும் சூழலில் இருந்து வருகிறோம்.
சூழலுக்கு உகந்த வட்ட சுழற்சி பாதையில் லித்தியம் மின்கலன்களை மறுசுழற்சி செய்வது அவசியம். இந்த முறையில் மறுசுழற்சி செய்தால் 99 சதவீதம் சுத்தமான லித்தியம், கோபால்ட், மாங்கனீஸ், நிக்கல் போன்றவற்றை உருவாக்கி, அவற்றைக் கொண்டு புது மின்கலன்களை தயாரிக்க முடியும்.
லித்தியம், ஜெர்மானியம் போன்ற முக்கிய வேதிப்பொருட்களை திரும்பபெறும் தொழில்நுட்பங்களை வடிவமைப்பதுடன், உலோகங்களை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பங்களையும் திறம்பட செயல்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
2050ம் ஆண்டு மின்கலம் தயாரிக்க 50 சதவீதம் மூலப்பொருட்களை இயற்கை முறையில் சுரங்கங்கள் வாயிலாகவும், 50 சதவீதம் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தேவையான வேதிப்பொருட்களை பெறுவதும், ஒரு கிராம் கழிவைக்கூட வீணாக்காமல் மறுசுழற்சி செய்யவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் புவிவெப்பமடைதலைக் குறைக்க, முக்கிய வேதிப்பொருட்களை மறுசுழற்சியின் மூலம் பெறுவது சிறந்த முறையாக இருப்பதால், அரசு மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்க முன்வரவேண்டும்.
இத்தகவலை மருத்துவர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்