தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thothal Halwa: தொதல் சாப்பிடலாம்.. வாங்க மக்களே எப்படி செய்ய வேண்டுமென பார்க்கலாம்!

Thothal Halwa: தொதல் சாப்பிடலாம்.. வாங்க மக்களே எப்படி செய்ய வேண்டுமென பார்க்கலாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 08, 2023 12:03 PM IST

தென்னிந்தியாவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான தொதல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தொதல்
தொதல்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

தேங்காய்

கருப்பட்டி

ஏலக்காய்

உப்பு

சீனி

சிகப்பு அரிசி

ஜவ்வரிசி

முந்திரி

பாதாம்

செய்முறை

நல்ல கருப்பான தேங்காய் 2 எடுத்து 3 முறை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து கொள்ள வேண்டும். 125 கிராம் சிகப்பு பச்சரிசியை ஊற வைத்து தண்ணீரை நன்றாக வடித்து கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். இப்போது தொதல் செய்ய ரெடியாகலாம். 3 முறை எடுத்த தேங்காய் பாலை ஒரு அடி கனமான இரும்பு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஒன்றரை ஸ்பூன் ஜவ்வரிசியை அதில் கலந்து கொள்ள வேண்டும். அதே தேங்காய் பாலில் நாம் பொடி செய்து வைத்த சிவப்பு பச்சரிசி மாவை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் 350 கிராம் கருப்பட்டியை சேர்த்து கொள்ள வேண்டும். கருப்பட்டி மண்ணாக இருந்தால் லேசாக தட்டி பால் எடுத்து அதை வடிகட்டி சேர்த்து கொள்ளலாம்.

இதையடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கிளற வேண்டும். இதில் 300 கிராம் சர்க்கரையை கலந்து விட வேண்டும். சர்க்கரை சேர்க்க விரும்பாதவர்கள் கருப்பட்டியை சேர்த்துக்கொள்ளலாம். இதில் ஒரு பிஞ்ச் அளவு உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதையடுத்து கை விடாமல் கிளறி விட வேண்டும். நீண்ட நேரம் கிளற வேண்டி இருக்கும்.

ஆனால் கிளறுவதை நிறுத்தினால் கெட்டியாகி விடும். இதையடுத்து தொதல் கெட்டியாக ஆரம்பிக்கும்போது ஒருஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் தொடர்ந்து கிளறும்போது தேவையான முந்திரி பாதாமை சேர்த்து கொள்ளலாம். தொதலில் எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அனைத்து கொண்ட வேண்டும் எண்ணெய் அதிகமாக பிரிந்தால் அதை வடித்து எடுத்து வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தொதல் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் வரை வரை ஆகும். மேலே எடுத்த அளவில் பொருட்களை எடுத்தால் ஒன்றரை கிலோ வரை தொதல் கிடைக்கும். இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்கள்கு செய்து கொடுத்து பாருங்கள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்