தைராய்டு பிரச்சனைகளில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு சமநிலையின்மை வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது குறைந்த ஆற்றல் மற்றும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். சில உணவுகள் இந்த பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
By Suguna Devi P Nov 24, 2024
Hindustan Times Tamil
பெரும்பான்மையானோர்க்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனை அவர்களது ஒழுங்கற்ற உணவு முறைகளால் உண்டாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதில் சில முக்கிய உணவுகள் பரிந்துரை செய்யப்படுகிறது.
முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த பிரேசில் பருப்புகளை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பூசணி விதைகள் காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் ஒரு டீஸ்பூன் பூசணி விதைகளை ஏதேனும் ஒரு பழத்துடன் சேர்த்து சாப்பிடுவது தைராய்டு செயல்பாட்டை சீராக்கும்.
கொத்தமல்லி இலைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர சிறந்த பலன்களை தரும்.
தேங்காய
ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், செயற்கை இனிப்புகளுக்கு பதிலாக ஒரு சிறிய தேங்காய் துண்டை சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதைகள்
ஒரு டீஸ்பூன் சூரியகாந்தி விதைகளை தினமும் மதியத்திற்கு முன் ஏதேனும் ஒரு பழத்துடன் சிற்றுண்டியாக சாப்பிடலாம்
பூண்டு
அரைத்த பூண்டை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.