ஒன்றல்ல 8 நன்மைகள் உள்ளது! தினமுமே நீங்கள் 2 ஆப்பிரிகாட் சாப்பிட்டால் என்னவாகும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஒன்றல்ல 8 நன்மைகள் உள்ளது! தினமுமே நீங்கள் 2 ஆப்பிரிகாட் சாப்பிட்டால் என்னவாகும்?

ஒன்றல்ல 8 நன்மைகள் உள்ளது! தினமுமே நீங்கள் 2 ஆப்பிரிகாட் சாப்பிட்டால் என்னவாகும்?

Priyadarshini R HT Tamil
Dec 20, 2024 06:00 AM IST

தினமும் 2 ஆப்பிரிகாட்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஒன்றல்ல 8 நன்மைகள் உள்ளது! தினமுமே நீங்கள் 2 ஆப்பிரிகாட் சாப்பிட்டால் என்னவாகும்?
ஒன்றல்ல 8 நன்மைகள் உள்ளது! தினமுமே நீங்கள் 2 ஆப்பிரிகாட் சாப்பிட்டால் என்னவாகும்?

செரிமான மண்டலத்துக்கு நல்லது

உங்கள் செரிமான மண்டல ஆரோக்கியத்தை பாதுகாக்க, நீங்கள் உங்கள் நாளை தினமும் 2 ஆப்பிரிகாட்கள் சாப்பிட்டு துவங்குவது சிறந்தது. இதில் உள்ள இயற்கை நார்ச்சத்துக்கள், உங்கள் குடலை சுத்தம் செய்கிறது. ,து உங்கள் செரிமான ஆரோக்கியத்தை இதமாக்க உதவுவதுடன், அதை வழக்கமாகவும் மாற்றுகிறது. உங்கள் குடலுக்கும் புத்துணர்வு தரும், ஒரு நல்ல ஊட்டமான ஒன்றைக் நாளில் துவக்கத்திலேயே கொடுக்க விரும்பினால், அது ஆப்பிரிக்காட்தான்.

சருமத்துக்கு இயற்கையான பொலிவு தரும்

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களால், உலர்ந்த ஆப்பிரிகாட்கள் உங்கள் சருமத்துக்கு இயற்கை பாதுகாப்பு கொடுக்கின்றன. இது உங்கள் சரும செல்களை சரிசெய்கிறது. வறட்சியைத் தடுக்கிறது. உங்கள் முகத்துக்கு, தேவையான காலை நேர பளபளப்பைக் கொடுக்கிறது. இதை நீங்கள் தினமும் காலையில் சாப்பிடுவது உங்கள் அழகுக்கு ஊட்டமளித்து, உறுதி கொடுக்கிறது.

வயிறு நிறைந்த உணர்வு, உங்களை இலகுவாக வைக்கிறது

நீங்கள் அதிகமான அல்லது கலோரிகள் நிறைந்த காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கு 2 உலர்ந்த ஆப்பிரிகாட்கள் சிறந்த தேர்வாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இது உங்களின் பசியைக் கட்டுக்குள் வைக்கும். இது உங்களுக்கு சோர்வு இல்லாத நிலையைத்தரும்.

இதய ஆரோக்கியம்

உலர்ந்த ஆப்பிரிகாட்டில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள், உங்கள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மினரல் சத்துக்கள், உங்கள் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகின்றன. உங்கள் உடலில் சோடியம் அளவுகளை முறைப்படுத்துகின்றன. இதை எடுததுக்கொள்வதை வழக்கமாக்கினால், அது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்க உதவுகிறது.

கூரான கண் பார்வை

ஆரஞ்சு நிறம் உங்கள் கவர்ந்து இழுப்பது மட்டுமல்ல, இதில் உள்ள பீட்டாகரோட்டின்களின் தாக்கம் அது. இது வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளதையும் காட்டுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது உங்கள் கண் வறண்டு போவது, அழுத்தம் மறறும் பார்வையில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க உதவுகிறது.

சிறிய அளவிலான எனர்ஜி பூஸ்ட்

காலையிலே நீங்கள் சோர்வாக உணர்ந்தால், இரண்டு உலர்ந்த ஆப்பிரகாட்கள் அதற்கு உதலம். இதில் உள்ள இயற்கை சர்க்கரை, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தேவையான மினரல்களுடன் சேர்ந்து, உங்களுக்கு தேவையான ஆற்றல் உடலில் அதிகரிக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்

உலர்ந்த ஆப்பிரிகாட்களில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள், உங்கள் எலும்புகளை வலுவாக்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உங்களுக்கு வயதாகும்போது குறிப்பாக தேவைப்படுபவையாகும். இது உங்கள் எலும்பு அடர்த்தியை முறையாகப் பராமரிக்க உதவுகின்றன. இது உங்களுக்கு எலும்புப்புரை, எலும்பு முறவு ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

இரும்பு குறைபாட்டை சரிசெய்யும்

சோர்வாகவோ அல்லது சோர்ந்தோ இருந்தால், உங்களுக்கு தேவையான இரும்புச்சத்துக்களை வழங்கி உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்க ரத்த சிப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும், ஒரு தாவர இரும்பு சத்தாக இந்த ஆப்பிரிக்காட் உள்ளது. இதை நீங்கள் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் இரும்புச்சத்துக்கள் அதிமாகும் வாய்ப்பைக் கொடுக்கின்றன மற்றும் அனீமியாவைத் தடுக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.