உலர்ந்த கருப்பு திராட்சைகளை தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 12 நன்மைகள்!
உலர்ந்த கருப்பு திராட்சைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
உங்களுக்குத் தெரியுமா? தினமும் ஒரு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அந்த திராட்சைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உங்களின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை நீங்கள் குளிர் காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டும். அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அசிடிட்டியை கட்டுப்படுத்துகிறது
உலர்ந்த கருப்பு திராட்சையில் இயற்கையான ஆல்கலைன் உட்பொருட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான வயிற்று அமிலங்களை சரிப்படுத்துகிறது. இதனால் உங்கள் உடலில் அமில அளவுகள் சமப்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கு அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கிறது. நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானமின்மை ஆகியவற்றைப் போக்குகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
உலர்ந்த கருப்பு திராட்சையில் அதிகளவில் கால்சியம் மற்றும் போரான் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இது உங்களுக்கு எலும்பு புரை நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக இவை குளிர் காலங்களில் உங்களுக்கு ஏற்படும் மூட்டு வலி போன்றவற்றைப் போக்குகிறது. அவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.
பல் மற்றும் ஈறுகளுக்கு நல்லது
உலர்ந்த கருப்பு திராட்சையில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது பற்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. இது பற்சிதைவு, ஈறுகளில் நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றைப் போக்குகிறது.
கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை உங்கள் கண் பார்வைத் திறனை அதிகரிக்க உதவுகிறது. இது உங்களுக்கு வயோதிகம் தொடர்பாக ஏற்படும் கண் கோளாறுகளை சரிசெய்கிறது. இது உங்களின் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் கண்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது.
சருமத்துக்கு நல்லது
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, பாலிஃபினால்கள், திராட்சையை உங்கள் சருமத்தின் வயோதிக தோற்றத்தை எதிர்த்து போராடச் செய்கிறது. இது உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை குறைக்கிறது. தெளிவான சருமத்தைக் கொடுக்கிறது. இது முகச்சுருக்கங்களைக் குறைக்கிறது. சரும ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது
உலர்ந்த கருப்பு திராட்சையில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் சோடியத்தின் அளவை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. இது உங்களுக்கு ரத்த அழுத்தத்தை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. இது உங்களுக்கு ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்கிறது.
தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது
உலர்ந்த கருப்பு திராட்சையில் அதிகளவில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் ரத்த நாளங்களை அமைதிப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு தலைவலி ஏற்படுவது குறைகிறது. இது உங்கள் தலைவலியின் தீவிரத்தையும் குறைக்கிறது. இது நாள்பட்ட தலைவலி உள்ளவர்களுக்கு நன்மை தருகிறது. இது தலைவலியால் ஏற்படும் டென்சனைக் குறைக்கிறது.
அனீமியாவைப் போக்குகிறது
உலர்ந்த கருப்பு திராட்சையில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இரும்புச் சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைப் போக்குகிறது.
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
உலர்ந்த கருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் கலோரிகள் குறைவு. இது உங்களுக்கு நல்ல ஸ்னாக்ஸ் ஆகும். இது உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இதனால் நீங்கள் தேவையற்ற வேறு உணவுப்பொருட்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது
இதில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் உடலை தொற்றுக்களில் இருந்து காக்கிறது.
வறட்டு இருமலைப் போக்குகிறது
கருப்பு உலர்ந்த திராட்சையில் வறட்டு இருமலைப் போக்கும் குணங்கள் உள்ளது. இது தொண்டை எரிச்சலைப் போக்குகிறது. இது உங்களின் சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது. இதனால் உங்களால் எளிதாக சுவாசிக்க முடிகிறது.
நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது
கருப்பு உலர்ந்த திராட்சையில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் உங்களின் உறக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்களுக்கு ஆழ்ந்த மற்றும் அமைதியான உறக்கம் கிடைக்கச் செய்கிறது. இது உங்களுக்கு தூக்கமின்மை கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இது உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்