பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியத்தை பேனி காக்க உதவும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 19, 2024
Hindustan Times Tamil
உங்கள் டயட்டில் சில உணவுகளை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் வாய்வழி சுகாதாரம் பேனி பாதுகாக்கப்படும்
வாயில் எச்சில் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியக்களை கட்டுப்படுத்தி, வாய்வழி சார்ந்த பிரச்னைகள் வராமல் பார்த்து கொள்ளும் உணவுகள் எவையெல்லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
வீக்கத்துக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் இஞ்சி, வாய் பகுதிகளில் திசுக்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. எனவே இஞ்சியை டயட்டில் சேர்ப்பதால் வாய்வழி சுகாதாரத்தில் நன்மை பெறலாம்
ஆப்பிள் பழத்தில் இருக்கும் மொறுமொறுப்பான தோற்றம் பற்களை சுத்தப்படுத்த உதவுவதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் பிளேக் பாதிப்பை நீக்குகிறது
பால், சீஸ், யோகர்ட் போன்ற பால் சார்ந்த பொருள்களில் இருக்கும் அதிகப்படியான கால்சியம், வாய் பகுதியில் இருக்கும் அமிலத்தை நடுநிலையாக்க உதவி, பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது
நார்ச்சத்து மிக்க பச்சை இலை காய்கறிகளை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் எச்சில் உற்பத்தி ஏற்பட்டு, வாய்களில் இருக்கும் பாக்டீரியாக்களை நடுநிலையாக்க உதவுகிறது
பச்சை வெங்காயத்தில் இடம்பிடித்திருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் ஈறு நோய் மற்றும் துவாரங்களுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களை அழிக்கிறது. வாய் வழி ஆரோக்கியத்துக்கான சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது
வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்