Terrace Gardening: மாடித் தோட்டத்தில் முள்ளங்கி வளர்ப்பது எப்படி? பக்கா டிப்ஸ்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Terrace Gardening: மாடித் தோட்டத்தில் முள்ளங்கி வளர்ப்பது எப்படி? பக்கா டிப்ஸ்கள்!

Terrace Gardening: மாடித் தோட்டத்தில் முள்ளங்கி வளர்ப்பது எப்படி? பக்கா டிப்ஸ்கள்!

Suguna Devi P HT Tamil
Sep 20, 2024 12:01 PM IST

Terrace Gardening: மாடித்தோட்டத்தில் அன்றாடம் வீட்டிற்க்கு பயன்படும் காய்கறிகளை பயிரிடுவதான் வழியாக பல நனமைகளை பெறமுடியும். முள்ளங்கி சாம்பார் முதல் பொரியல் வரை பெரும்பாலும் பயன்படக்கூடிய ஒரு முக்கியமான காய்கறியாகும். முள்ளங்கி உடலுக்கும் பல நன்மைகளை கொடுக்கும்.

Terrace Gardening: மாடித் தோட்டத்தில் முள்ளங்கி வளர்ப்பது எப்படி? பக்கா டிப்ஸ்கள்!
Terrace Gardening: மாடித் தோட்டத்தில் முள்ளங்கி வளர்ப்பது எப்படி? பக்கா டிப்ஸ்கள்!

முள்ளங்கி செடி வளரும்  தொட்டி 

மாடித்தோட்டத்தில் முள்ளங்கி செடி வளர்க்கும் முன்னதாக அதற்கு என தனியாக இடம் ஒதுக்க வேண்டும். பின்னர் செடி வளர்க்கத் தேவையான தரமான தொட்டிகளை தேர்வு செய்ய வேண்டும். செடி வளர்க்கும் பைகளையும் பயன்படுத்தலாம். எளிதில் கிழியும் பைகள், உடைந்த தொட்டிகளை தவிர்த்தல் அவசியம். 

தேர்வு செய்த தொட்டியில் ஒரு பங்கு மணல், ஒரு பங்கு நார்க்கழிவு, மேலும் ஒரு பங்கு தென்னை நார் , ஒரு பங்கு இயற்க்கை உரம் ஆகியவற்றை வரிசையாக நிரப்ப வேண்டும். கிழங்கு வகை செடி என்பதால் நார் சேர்ப்பது நல்ல வளர்ச்சியை தரும். இந்த நார் மண்ணை இறுக விடாமல் தடுக்கும். 

 செடியை நடுதல் 

ஒவ்வொரு செடியையும் அரை அடி இடைவெளியில் நட வேண்டும். முள்ளங்கி செடியை நேரடியாகவே நடலாம். இதற்கான செடிகளை விதைகள், செடிகள் விற்கப்படும் இடங்களில் இருந்து வாங்கலாம். தினமும் காலை அல்லது மாலை என ஏதாவது ஒரு வேளையில் தண்ணீர் விட வேண்டும். செடிக்கு போதிய அளவு மட்டுமே தண்ணீர் விட வேண்டும். அதிக அளவில் தண்ணீர் விடுவதை தவிர்க்க வேண்டும். 

இயற்கை உரங்கள் 

வீட்டில் தினம் தோறும் மிச்சமாகும் காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை உரமாக பயன்படுத்தலாம். பசுவிடம் இருந்து கிடைக்கும், பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சகாவியத்தை 10 மில்லி எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். 

செடியின் இலைகளில் பூச்சி தாக்கினால் வெப்ப மர இலையை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது சிறப்பாக செயல்பட்டு பூச்சிகளை விரட்டுகிறது.இது போன்ற இயற்கை உரங்களினால் செடி நன்றாக வளரவதை காணலாம். 

அறுவடை 

முள்ளங்கி செடி நன்றாக வளர்ந்த பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து அறுவடை செய்யலாம். முள்ளங்கி கிழங்குகள் வெளியே தெரிய ஆரம்பித்த பின்னர் செடியை பிடுங்கி தண்ணீரால் மண்ணை கழுவி சமையலுக்கு பயன்படுத்தலாம்.  

முள்ளங்கியில் அதிக நார் சத்து இருப்பதால் மலச்சிக்கலை சரிசெய்கிறது. கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புகளுக்கு நன்மை விளைவிக்கிறது. குழந்தைகளுக்கு முள்ளங்கி சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.