Gardening Tips : சிறிய இடம், குறைவான பராமரிப்பே போதும்! இந்தச் செடிகளை வீட்டுக்கு கொண்டுவந்து அழகாக்குங்கள்!
Gardening Tips : சிறிய இடம், குறைவான பராமரிப்பே போதும். இந்தச் செடிகளை வீட்டுக்கு கொண்டுவந்து உங்கள் வீட்டை அழகாக்குங்கள்.
சிறிய இடத்தில், குறைவான பராமரிப்பில் நீங்கள் சில செடிகளை எளிதாக வளர்த்துவிடலாம். நம்மால் குறைவான இடத்தில் செடிகளை வளர்க்க முடியாது. அதனால் குறைவான இடம் இருந்தால் செடிகள் வளர்ப்பது குறித்து நாம் யோசிப்போம். நம்மால் நிறைய செடிகளை வளர்க்க முடியாது என வருந்துவோம். அதற்கு காரணம் செடிகள் அனைத்தும் படர்ந்து வளர நிறைய இடம் வேண்டும் மற்றும் சிலவகை கொடிகள் எல்லாம் வளர்க்க அதிக இடம் தேவை என்று எண்ணி நாம் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டோம். மேலும் தோட்டத்துக்கு என்றால் நிறைய பராமரிப்பு வேண்டும். அதையும் நாம் செய்யமாட்டோம் என்றறெண்ணி பின்தங்கிவிடுவோம். ஆனால் சில செடிகளை நீங்கள் வளர்ப்பதற்கு உங்களுக்கு அதிக இடம் தேவையில்லை. குறைவான இடமே போதுமானது. அவற்றை பராமரிப்பதும் எளிது. அதுபோன்ற சில செடிகளை உங்களுக்கு கூறுகிறோம். அவை என்னவென்று தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.
போத்தோஸ்
போத்தோஸ் மற்றொரு அழகான தாவரமாகும். இதற்கு சிறிய இடமே போதுமானதுதான். இதன் இலைகளுக்கு அதிக இடம் தேவையே இல்லை. இவற்றை சுவர் மீது படர விடலாம். இது அதிகப்படியான இடத்தை குறைக்க உதவும்.
கற்றாழை
கற்றாழை இதை தொட்டியில் வைத்து வளர்ப்பதும் எளிது. அதுமட்டுமின்றி இது மருத்துவ குணங்கள் நிறைந்த செடியாகும். இதை உங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பது எளிது. இது அடர்ந்து படர்ந்து வளரக்கூடிய செடியாகும். எனவே இதை வெட்டிவெட்டி வளர்க்கவேண்டும். இந்தச் செடி வளரும் அளவுக்கு இடம் கொடுப்பதை மட்டும் உறுதிசெய்யுங்கள்.
அமைதி அல்லி
அமைதி அல்லி என்பது ஒரு சிறிய வகை தாவரமாகும். இதை வளர்ப்பது எளிது. இதில் அழகிய வெள்ளை மலர்கள் மலரும். இதன் இலைகள் அடர் பசுமை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் பளபளப்பாகவும் இருக்கும். இதன் இலைகள் மற்றும் பூக்கள் இரண்டும் நீண்டு இருக்கும். இதன் தொட்டிக்கும், வளர்ச்சிக்கும் சிறிது இடமே போதும்.
ஜேட்
இதன் தொட்டி மிகவும் சிறியதாக இருக்கும். இந்த தாவரமும் சிறிய வகை தாவரமாகும். இதை வளர்க்க தெரிந்துகொண்டால் சிறிய இடத்திலே எளிதாக வளர்த்துவிடலாம். இந்தச் செடி சிறியச் செடி என்றால், வீட்டுக்கு உள்ளே வைத்து இதை வளர்க்கலாம் அல்லது குறிப்பிட்ட சில இடத்தில் இதை வைத்து வளர்க்கலாம். இதன் வளர்ச்சியை குறிப்பிட்ட இடத்திற்குள் அடக்கிவிடவேண்டும்.
இசிவேரியா
இசிவேரியா என்பது அழகாக வளரக்கூடிய தாவரமாகும். இதன் இலைகள் சதைப்பற்றுடன் இருக்கும். இதற்கு சிறிய இடமே போதும். இதை சிறிய தொட்டடியில் வைத்து நீளமாக வளர்த்துக்கொள்ளலாம். இதை அடர்ந்து படர்ந்து வளரவிடக்கூடாது.
இங்கிலிஷ் ஐவி
இங்கிலிஷ் ஐவி செடியில் அழகான அம்பு போன்ற இலைகள் தோன்றும். இது அடர்ந்து படர்ந்து வளரக்கூடியது. இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த செடியை நீங்கள் குறுகிய இடத்திலே வளர்த்துவிடலாம். இதன் தண்டுகள் நீண்டு வளராது. இதன் இலைகளை சுவற்றில் படரவிட்டு வளர்க்கலாம். இதற்கு எல்லைகள் கிடையாது.
ஃபில்லோடென்ட்ரான்
ஃபில்லோடென்ட்ரான் என்ற இந்த தொட்டிச் செடிக்கு பெரிய இலைகள் இருக்கும். இந்த செடியும் அதன் தண்டுகளும், நீளமாக வளராது. இவை சிறப்பான வீட்டுக்குள் வளர்க்கக் கூடிய தொட்டிச் செடிகள். எனவே இவற்றுக்கு அதிக இடம் தேவையில்லை.
டில்லாண்சியா
டில்லாண்சியா என்றால், காற்றில் வளரக்கூடிய தாவரமாகும். இதற்கு மண் தேவையில்லை தண்ணீர் கொஞ்சம் இருந்தாலே போதும். இதை தொங்கும் தொட்டிகளில் வளர்த்துவிடலாம். இதற்கு தரையில் இடமே வேண்டாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்