சிவப்பு நிறத்தில் இருக்கும் சீனி கிழங்கு உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 16, 2023
Hindustan Times Tamil
ஊட்டச்சத்துகள் அடர்ந்த மிகுந்த காய்கறிகளில் ஒன்றாக சீனிக்கிழங்கு உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, மாங்கனீசு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது
சீனி கிழங்கு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் நிகழும் மாற்றங்களை பார்க்கலாம்
இதில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதயம் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது
இதில் இடம்பிடித்திருக்கும் நார்ச்சத்துகள் எடை குறைப்புக்கு உதவுவதுடன், ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தவும் உதவுகிறது
சீனி கிழங்கில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் சி, ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் கவசமாக திகழ்கிறது. இது டைப் 2 டயபிடிஸுடன் தொடர்புடையதாக உள்ளது
சீனி கிழங்கில் உள்ள கார்டினாய்ட்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் வயிறு, கிட்னி, மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது
சீனி கிழங்குகளில் அதிகமாக காணப்படும் பீட்டா கரோடீன் அழற்சிக்கு எதிராக போராடுவதுடன், கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது