Tea : தினமும் காலையில் நெய் கலந்த தேநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. நோய் எதிர்ப்பு சக்தி சரும பளபளப்பு வரை!-tea drinking tea mixed with ghee every morning has so many benefits immunity to skin glow - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tea : தினமும் காலையில் நெய் கலந்த தேநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. நோய் எதிர்ப்பு சக்தி சரும பளபளப்பு வரை!

Tea : தினமும் காலையில் நெய் கலந்த தேநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. நோய் எதிர்ப்பு சக்தி சரும பளபளப்பு வரை!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 11, 2024 04:18 PM IST

Tea : சில நாட்களுக்கு முன்பு நெய் காபி என்ற ஒரு டிரெண்டு உருவானது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் நெய் டீ பரபரப்பாக பேசப்படுகிறது. நெய் தேநீர் என்றால் என்ன, அதை எப்படி செய்வது, அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது உங்கள் மனதில் எழலாம். நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ

Tea : தினமும் காலையில் நெய் கலந்த தேநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..  நோய் எதிர்ப்பு சக்தி சரும பளபளப்பு வரை!
Tea : தினமும் காலையில் நெய் கலந்த தேநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. நோய் எதிர்ப்பு சக்தி சரும பளபளப்பு வரை!

நெய்யில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் நெய்யின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனை அளவாக உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்த காரணத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு நெய் காபி என்ற ஒரு டிரெண்டு உருவானது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் நெய் டீ பரபரப்பாக பேசப்படுகிறது. நெய் தேநீர் என்றால் என்ன, அதை எப்படி செய்வது, அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது உங்கள் மனதில் எழலாம். நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.

நெய் தேநீர் தயாரிக்கும் முறை

ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகையில், நெய் டீ தயாரிக்க முதலில் பிளாக் டீயை கொதிக்க விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு சிறிது ஓமம் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். நன்கு கொதித்தால் நெய் டீ ரெடி. நாம் தயாரிக்கும் வழக்கமான பால் டீயில் நெய் சேர்க்கலாம் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை.

நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஒரு கப் நெய் டீயுடன் நமது காலைப் பழக்கத்தைத் தொடங்குவது உற்சாகமாக இருக்கும். ஆனால் நெய் டீ குடிப்பதோடு சில ஆரோக்கியமான பழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும், அப்போதுதான் அதன் முழு பலனையும் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். அஞ்சனா கலியாவின் கூற்றுப்படி, 'ஏ, டி மற்றும் ஈ போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் நல்ல மூலமாக நெய் உள்ளது, மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நெய்யுடன் தேநீர் தயாரிப்பது அல்லது தேநீரில் நெய் சேர்த்துக்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நமது சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது. இது லூப்ரிகண்டாக செயல்படுவதோடு, நமது மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது,' என்கிறார். காலையில் நெய் டீ குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இலவங்கப்பட்டையுடன் பிளாக் டீயை தயார் செய்து அதில் நெய் கலந்து குடிக்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட ஆலோசனை.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.