Cooking Tips: ‘கமகமனு.. பாய் வீட்டு நெய் சோறு..’ குக்கர் போதும்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!
Cooking Tips: பிரியாணி போல, இதற்கு பெரிய அளவில் மசாலாவும், பொருட்களும் தேவைப்படாது. ஆனால், பிரியாணியை விட அதீத சுவையோடு இருக்கும். அடுப்பை குறைத்துவிட்டு, 4 டம்ளர் அரிசிக்கு 5 டம்ளர் தண்ணீர் வீதம், குக்கரில் முதலில் தண்ணீரை ஊற்றவும்.

Cooking Tips: நெய் சோறு என்றாலே அதீத சுவை, அதிலும் பாய் வீட்டு நெய் சோறு என்றால், சொல்லவா வேண்டும். தென் மாவட்டங்களில் தயாரிக்கப்படும் ‘பாய் வீட்டு நெய் சோறு’ எப்படி செய்யலாம் என்கிற ஆசை உங்களுக்கு இருந்தால், உங்களுக்கான சமையல் குறிப்பு தான் இது. இதற்கு அதிக பொருளும் தேவையில்லை, பெரிய பாத்திரங்களும் தேவையில்லை. உங்கள் வீட்டு குக்கரை வைத்து, சில நிமிடங்களில் தயாரித்து விடலாம். இதோ அதன் முழு குறிப்பு:
தேவையான பொருட்கள் என்ன?
- பாஸ்மதி அரிசி அரை கிலோ
(இருமுறை கழுவிய பின், அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்)
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை ஸ்பூன்
- நெய்- 75 மி.லி.,
- முந்திரி பருப்பு- தேவைக்கு ஏற்பட
- வெங்காயம்- 2 வெட்டியது
- பச்சை மிளகாய்- 2
- ஏலக்காய்-4
- சோம்பு- அரை ஸ்பூன்
- கிராம்பு- 5
- அண்ணாசிப்பூ-2
- பட்டைத்துண்டு- 4
- எண்ணைய், உப்பு, தண்ணீர்- தேவைக்கு ஏற்ப
செய்முறை விளக்கம்:
குக்கர் சூடாக்கி 30 மில்லி கிராம் நெய் மற்றும் 50 மில்லி கிராம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். நெய் மட்டுமே ஊற்றினால் திகட்ட ஆரம்பித்துவிடும். அதனால் எண்ணெய் சேர்ப்பது நல்லது. தேங்காய் எண்ணெய் சேர்த்தால் இன்னும் கமகமவென இருக்கும். நெய், எண்ணெய் காய்ந்த பின், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, அண்ணாச்சிபூ ஆகியவற்றை அதில் கொட்டவும். லேசாக அவற்றை வதக்கவும். அதன் பின் முந்திரி பருப்பை சேர்த்து வதக்கவும். முந்திரி நிறம் மாறியதும், வெட்டிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் 3 நிமிடம் வதக்குவது நல்லது. அதன் பின் பச்சை மிளகாயை நறுக்காமல் அப்படியே அதில் போடவும்.