Kadi Joke : ‘இந்த ஊர்ல இருக்கலாமா வேணாமா.. இன்னைக்கு முடிவு பண்றேன்’ இன்றைய கடி ஜோக்ஸ்!-tamil kadi joke august 12 2024 mokka jokes tamil comedy sirippukal - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Joke : ‘இந்த ஊர்ல இருக்கலாமா வேணாமா.. இன்னைக்கு முடிவு பண்றேன்’ இன்றைய கடி ஜோக்ஸ்!

Kadi Joke : ‘இந்த ஊர்ல இருக்கலாமா வேணாமா.. இன்னைக்கு முடிவு பண்றேன்’ இன்றைய கடி ஜோக்ஸ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 12, 2024 10:21 AM IST

Kadi Joke: வழக்கம் போல இன்னைக்கும் உங்களை மகிழ்விக்க அல்லது உச் போட வைக்கும் மொக்கை கடி ஜோக்ஸ் இதோ வருகிறது!

Kadi Joke : ‘இந்த ஊர்ல இருக்கலாமா வேணாமா.. இன்னைக்கு முடிவு பண்றேன்’ இன்றைய கடி ஜோக்ஸ்!
Kadi Joke : ‘இந்த ஊர்ல இருக்கலாமா வேணாமா.. இன்னைக்கு முடிவு பண்றேன்’ இன்றைய கடி ஜோக்ஸ்!

‘ரோஜாவை தாலாட்டும் தென்றல்’

நண்பன் 1: என்னடா கையில் ஃபேண்டேஜ் போட்டுருக்க?

நண்பன் 2: அவன் என் கையில ரோஜா பூ தூக்கிப் போட்டுட்டா

நண்பன் 1: ரோஜா போட்டா எப்படி ஃபேண்டேஜ்?

நண்பன் 2: தொட்டியோட தூக்கி போட்டுட்டாடா!

‘உங்க டீல் ரொம்ப பிடிச்சிருக்கு சார்’

பயணி: சார்.. இது என்னோட ட்ரெயின் தானே?

ஸ்டேஷன் மாஸ்டர்: நோ நோ.. ரயில்வேயோட ட்ரைன்!

‘இந்த கொசு தொல்லை தாங்க முடியல’

ஒருவர்: அந்த கொசுக்கள் எல்லாம் ஏன் போராட்டம் பண்ணுதுங்க?

மற்றொருவர்: இ-காமர்ஸ், இ-மெயில், இ-டெண்டர் மாதிரி, கொசு-காமர்ஸ், கொசு-மெயில், கொசு-டெண்டர் கொண்டு வரணுமாம்!

‘இவனோட ஒரே டார்ச்சரா இருக்கே’

நண்பன் 1: என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி இரண்டு பொண்ணுங்க டார்ச்சர் பண்றாங்கடா..!

நண்பன் 2: அடப்பாவி.. யாருடா அந்த பொண்ணுங்க?

நண்பன் 1: எங்க அம்மாவும், பாட்டியும் தாண்டா!

‘மச்சான் ஒரு டீ சொல்லேன்..’

நண்பன் 1: எக்ஸாம் எப்படி எழுதுன..

நண்பன் 2: நல்லா எழுதுனேன்டா..

நண்பன் 1: சரி, வா போய் ஒரு டீ போடலாம்!

நண்பன் 2: இப்போ தானடா ‘காப்பி’ அடிச்சோம்!

‘ரொம்ப நல்லா வருவேப்பா..’

ஆசிரியர்: பென்குயின் எதிர்பதம் யாருக்காவது தெரியுமா?

மாணவன்: ஆண்கிங் சார்!

‘போஸ்ட் மேன் பாவம்..’

ஆசிரியர்: முகவரி இருக்கும் உயிரினம் எது?

மாணவன்: அணில் சார்..

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: அதுக்கு தான் பின்கோடு இருக்கு சார்!

‘கால்குலேட்டரே கன்பியூஸ் ஆயிடுச்சு..’

ஆசிரியர்: 6ம் 6ம் சேர்ந்தா என்ன வரும்?

மாணவன்: வெள்ளம் வரும் சார்!

‘முத்திரை பதிக்கும் பதில்’

ஆசிரியர்: போஸ்ட் கார்ட்ல ஸ்டாம்ப் ஒட்டலைனா என்ன ஆகும்?

மாணவன்: கீழே விழுந்திடும் சார்!

‘இசையால் வசமாகா இதயம் எது’

ஆசிரியர்: மிகப்பெரிய இசைக்கருவி எது என்று சொல்!

மாணவன்: புல்‘லாங்’குழல் தான் சார்!

‘லிட்டர் கணக்குல வரும் போல’

ஒருவர்: தேனிக்கள் இருக்கிற இடத்திற்கு ஏன் சொம்போட போறீங்க?

மற்றொருவர்: அது கொட்டுமே.. அதான்!

‘எனக்குனே வருவீங்களாடா..’

டாக்டர்: உங்க வீட்ல கரெண்ட் இல்லைனா என்னிடம் எதுக்கு வர்றீங்க?

வீட்டுக்காரர்: நீங்களும் பீஸ் போடுவீங்களே டாக்டர்!

‘முடிஞ்சு போ போ..’

மாணவன்: சார்.. நான் ஒன்னு சொல்லட்டுமா?

ஆசிரியர்: சரி, சொல்லு!

மாணவன்: ஒன்னு!

‘ஜம்முனு ஒரு வார்த்தை’

மாணவன்: சார்.. பாம்புக்கு கால் இருக்கா?

ஆசிரியர்: இல்லை..

மாணவன்: அப்போ பம்புனு தானே சொல்லனும், ஏன் ‘பா’ம்புனு சொல்றீங்க!

‘கண்டிப்பா ஆயிருக்கும் தம்பி’

ஆசிரியர்: ரயிலை கண்டுபிடிக்களைனா என்ன ஆயிருக்கும் சொல்லு?

மாணவன்: தண்டாவளம் வேஸ்டா போயிருக்கும் சார்!

‘சூப்பர் பேட்ஸ்மேன்’

அம்பயர்: ஏன் அந்த பேட்ஸ்மேன் மூன்றாவது ஸ்டெம்பை பிடுங்கிப் போடுறாரு?

பேட்ஸ்மேன்: அவரோட காலை ஸ்டெம்பா வைக்கப் போறாராம்

அம்பயர்: ஏன் அப்படி?

பேட்ஸ்மேன்: அது தான் லெக்ஸ்டெம்ப் ஆச்சே!

தினமும் கடி ஜோக்குகள் பார்த்து ரசித்து கடுப்பாக, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.