தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sundaikai Rasam : உடலுக்கு பல நன்மைகள் தரும் சுண்டைக்காய் ரசம்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்!

Sundaikai Rasam : உடலுக்கு பல நன்மைகள் தரும் சுண்டைக்காய் ரசம்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Sep 03, 2023 12:00 PM IST

Sundaikkai Rasam : தினமும் வெளியில் சாப்பிடுபவர்களுக்கு அல்லது பயணத்தில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு களைப்பாகவும், வெளியில் விதவிதமாக சாப்பிட்டு வயிறு ஒரு மாதிரி இருந்தால், இந்த சுண்டக்காய் ரசம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டமும், உற்சாகமும் அளிக்கும்.

சுண்டைக்காய் ரசம் செய்வது எப்படி?
சுண்டைக்காய் ரசம் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

சுண்டைக்காயில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவி செய்யும்.

ஜீரண ஆற்றலை மேம்படுத்தும், அனீமியாவை சரிசெய்யும், நீரிழிவை கட்டுக்குள் வைக்கும், மாதவிடயை சீர்படுத்தும், இதய ஆரோக்கியத்துக்கு உதவும், காய்ச்சலைக் குணப்படுத்தும், சிறுநீரக செயலிழப்பு சரிசெய்யும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு உறுதியளிக்கும் உணவுகளுள் சுண்டைக்காயும் ஒன்று.

சுண்டக்காய் ரசம் வைக்க தேவையான பொருட்கள்

சுண்டக்காய் – கால் கப்

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் ஊறவைத்து கரைசல் எடுத்துக்கொள்ள வேண்டும்)

பெருங்காயம் – 1 சிட்டிகை

ரசப்பொடி – அரை ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

தக்காளி – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பூண்டு – 7 பல் (இடித்தது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெல்லம் – சிறிதளவு

மிளகுத்தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

தினமும் வெளியில் சாப்பிடுபவர்களுக்கு அல்லது பயணத்தில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு களைப்பாகவும், வெளியில் விதவிதமாக சாப்பிட்டு வயிறு ஒரு மாதிரி இருந்தால், இந்த சுண்டக்காய் ரசம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டமும், உற்சாகமும் அளிக்கும்.

செய்முறை

சுண்டக்காயை ஒன்றிரண்டாக தட்டி தண்ணீரில் அலசி எடுத்துக்கொள்ள வேண்டும். (இது சுண்டக்காயை சுத்தம் செய்யும் வழக்கமான முறை)

அதை தனியாக வைத்து விட வேண்டும். புளிக்கரைசலையும் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் சேர்த்து அது பொரிந்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் சுண்டக்காயையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி மையாக மசிந்ததும், புளிக்கரைசல் மற்றும் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய்ம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

கடைசியாக வெல்லம், கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி இறக்க வேண்டும். சூடான சாதத்தில் இதை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நன்மைகளை கொடுக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்