உங்களுக்கு புத்துணர்வு தரும் பானம் இனி தேங்காய்ப்பால் காபி! ஆரோக்கியமும் அதிகம்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்களுக்கு புத்துணர்வு தரும் பானம் இனி தேங்காய்ப்பால் காபி! ஆரோக்கியமும் அதிகம்! இதோ ரெசிபி!

உங்களுக்கு புத்துணர்வு தரும் பானம் இனி தேங்காய்ப்பால் காபி! ஆரோக்கியமும் அதிகம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Oct 19, 2024 11:39 AM IST

உங்களுக்கு புத்துணர்வு தரும் பானம் இனி தேங்காய்ப்பால் காபி, ஆரோக்கியமும் அதிகம். தேங்காய்ப்பாலிலும் காபி செய்யலாம், இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு புத்துணர்வு தரும் பானம் இனி தேங்காய்ப்பால் காபி! ஆரோக்கியமும் அதிகம்! இதோ ரெசிபி!
உங்களுக்கு புத்துணர்வு தரும் பானம் இனி தேங்காய்ப்பால் காபி! ஆரோக்கியமும் அதிகம்! இதோ ரெசிபி!

தேங்காயில் எண்ணற்ற கொழுப்பு உள்ளது. தேங்காய்ப்பாலில் இயற்கையாகவே லாக்டோஸ் இல்லை. சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு தேங்காய்ப்பால் ஒரு சிறந்த மாற்று ஆகும். வீக்கத்துக்கு எதிரானது, நுண்ணுயிர்களுக்கு எதிரானது, பூஞ்சைக்கு எதிரான நற்குணங்கள் கொண்டது. இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் கல்லீரல் மூலம் ஆற்றலாக வளர்சிதை மாற்றம் பெறுகின்றன. தேங்காய்ப்பால் அல்சரை குணப்படுத்துவது விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்ப்பாலில் அலர்ஜி ஏற்படுத்தும் குணங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் இது யாருக்காவது அலர்ஜியை ஏற்படுத்தினால் அவர்கள் தவிர்ப்பதே நல்லது. எனினும் தேங்காய்ப்பாலை மிதமான அளவுதான் பயன்படுத்த வேண்டும். அதிகளவு உபயோகித்தால் வயிறு உபாதைகளை ஏற்படுத்தும். தேங்காய்ப்பாலை பயன்படுத்தும்போதும் அதில் தண்ணீர் அதிகம் கலந்து நீர்த்துப்போகச் செய்துதான் உபயோகிக்கவேண்டும். இத்தனை நன்மைகள் நிறைந்த தேங்காய்ப்பாலில் நீங்கள் காபி செய்து பருகலாம். அது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

தேங்காய்ப் பால் – ஒரு கப்

(அரை கப் தேங்காய் துருவலை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன், சிட்டிகை ஏலக்காய்ப்பொடி தேவைப்பட்டால் கலந்துகொள்ளலாம். அது தேங்காய்ப்பாலின் சுவையை அதிகரித்துக்காட்டும்)

காபித்தூள் – ஒரு ஸ்பூன்

கொதிக்கும் தண்ணீர் – அரை கப்

சிம்பிள் சிரப் – 2 டேபிள் ஸ்பூன்

(சிம்பிள் சிரப் என்றால் தண்ணீரையும் சர்க்கரையையும் நன்றாக அடித்து கலந்துவைத்துக்கொள்ளும் ஒரு கலவைதான். இதை நீங்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்ய முடியும். கால் டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சர்க்கரையை கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்)

செய்முறை

ஒரு டம்ளரில் காபித்தூள் மற்றும் சூடான தண்ணீரை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதில் சிம்பிள் சிரப் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் கலந்துகொள்ளவேண்டும். அதில் தேங்காய்ப்பாலை கலந்து பருகினால் சூப்பர் சுவையில் தேங்காய்ப்பால் காபி தயார்.

இதை ஐஸ்கட்டிகளுடன் பரிமாற வெயிலும் குளுமையாகும். உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். ஐஸ்கட்டிகளை விரும்பாதவர்கள் அவற்றை தவிர்த்துவிடலாம். உங்களுக்கு உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும், உற்சாகத்தையும் தரும் இந்த பானத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற வித்யாசமான ரெசிபிக்கள், பாரம்பரிய ரெசிபிக்கள் உள்ளிட்ட பல்வேறு ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் எண்ணற்ற தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே இவற்றை தெரிந்துகொள்ள நீங்கள் எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். படித்து பலன்பெறுங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.