ரத்தசோகையால் அவதியா? உடலில் ஹீமோகுளோபின் இல்லையா? ஒரு வாரத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கலாமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரத்தசோகையால் அவதியா? உடலில் ஹீமோகுளோபின் இல்லையா? ஒரு வாரத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கலாமா?

ரத்தசோகையால் அவதியா? உடலில் ஹீமோகுளோபின் இல்லையா? ஒரு வாரத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கலாமா?

Priyadarshini R HT Tamil
Nov 03, 2024 08:58 AM IST

ரத்தசோகையால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் உடலில் ஹீமோகுளோபின் இல்லையா? ஒரு வாரத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

ரத்தசோகையால் அவதியா? உடலில் ஹீமோகுளோபின் இல்லையா? ஒரு வாரத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கலாமா?
ரத்தசோகையால் அவதியா? உடலில் ஹீமோகுளோபின் இல்லையா? ஒரு வாரத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கலாமா?

ஆரோக்கியமான இரும்பு அளவுகளை பராமரிப்பது எப்படி என்று பாருங்கள்

அமெரிக்க சுகாதார மையத்தின் அறிவுரைப்படி ஒருவர் தினமும் எவ்வளவு இரும்புச்சத்துக்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 14 முதல் 18 வயது வரை உள்ள நபர்களில் ஆண்கள் 11 மில்லிகிராம், பெண்கள் 15 மில்லிகிராம் எடுத்துக்கொள்ளவேண்டும். 19 முதல் 50 வயது வரையில் உள்ள நபர்களில் ஆண்கள் 8 மில்லிகிராமும், பெண்கள் 18 மில்லிகிராமும் எடுத்துக்கொள்ளவேண்டும். கர்ப்பிணிகள் அன்றாடம் 27 மில்லிகிராம் அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.

இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள்

தினமும் இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் உடலில் இரும்புச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். இறைச்சி, சிக்கன் ஆகியவற்றில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. தாவர அடிப்படையிலான உணவுகளை மட்டுமே உட்கொள்ள விரும்புபவர்கள், கீரைகள், பருப்பு வகைகள், நட்ஸ்கள் மற்றும் விதைகளை அதிகம் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

இரும்புச்சத்துக்களும், வைட்டமின் சியும்

உங்கள் உடலின் இரும்புச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை வைட்டமின் சி அதிகரிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் உடல் அதிக இரும்புச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவ முடியும். கீரை சாலட்டில் நீங்கள் எலுமிச்சை சாற்றை பிழிந்து உட்கொள்வது, உங்கள் உணவுடன் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது என செய்யும்போது உங்கள் உடல் அதிகம் இரும்புச்சத்துக்களை உறிஞ்சும்.

சாப்பிடும்போது இரும்பை தடுப்பவற்றை தவிர்க்கவேண்டும்

சில உணவுகள் மற்றும் பானங்கள், உங்களின் இரும்புச் சத்துக்கள் உறிஞ்சும் திறனை தடுக்கும். காஃபி மற்றும் டீயில் டானின்கள் உள்ளது. இது உங்கள் உடலின் இரும்புச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை பாதிக்கும். கால்சியம் அதிகம் உள்ள பால் பொருட்கள், நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உடல் எடுத்துக்கொள்ளும் இரும்புச்சத்துக்களின் அளவை குறைத்துவிடும். எனவே நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.

இரும்புச்சத்து மாத்திரைகள்

உணவு மட்டுமே போதாது. இரும்புச்சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளும் அவசியம். உங்கள் உடலின் இரும்புச்சத்துக்களை விரைந்து உயர்த்த வேண்டுமெனில் அதற்கு இந்த மாத்திரைகள் உதவும். எனவே நீங்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்னர், உங்கள் மருத்துவரிடம் பேசவேண்டும். அதிகம் இரும்புச்சத்துக்கள் உடலில் இருந்தாலும் அது ஆபத்துதான். மருத்துவர்கள் உங்களுக்கு தேவையான அளவை பரிந்துரைப்பார்கள் மற்றும் உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றாகவும் அது இருக்கும்.

வார்ப்பிரும்பு பாத்திரங்கள்

உங்களுக்கு போதிய இரும்புச்சத்துக்கள் கிடைக்கவேண்டுமெனில் வார்ப்பிரும்பு பாத்திரங்களை உபயோகப்படுத்துங்கள். இந்த பாத்திரங்கள் உங்கள் உடலில் இரும்புச்சத்துக்களை அதிகரிக்கச் செய்யும். நீங்கள் அமிலம் நிறைந்த உணவுகளை சமைக்கும்போது, குறிப்பாக தக்காளி மற்றும் சிட்ரஸ் அடிப்படையிலான உணவுகளை செய்யும்போது, அது உங்கள் உணில் சிறிதளவு இரும்பை சேர்க்கிறது. இந்த எளிய மாற்றம் உங்கள் உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் கிடைக்க வழிவழக்கும்.

இரும்புச்சத்துக்கள் நிறைந்த ஸ்னாக்ஸ்

உங்கள் உணவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்த ஸ்னாக்ஸ்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் நாள் முழுவதும் இரும்புச்சத்துக்களை நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது அதிகரிக்கும். எனவே நட்ஸ்கள், உலர் திராட்சைகள், ஆப்ரிகாட் மற்றும் முந்திரி ஆகியவற்றை அவ்வப்போது கொரியுங்கள். உங்கள் உணவில் பரங்கிக்காய் விதைகள் மற்றும் உலர் பழங்கள் அதிகம் இடம் பெறட்டும். எனவே உங்கள் உடலில் இரும்புச்சத்துக்களை அதிகரிக்கவேண்டுமெனில், ஸ்னாக்ஸ்களாக நீங்கள் இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.