இந்த தீபாவளி எனக்கு டபுள் போன்ஸ்..சுகாதார பணியாளர்களுக்கு ஸ்வீட், சேலை வழங்கிய நமீதா
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  இந்த தீபாவளி எனக்கு டபுள் போன்ஸ்..சுகாதார பணியாளர்களுக்கு ஸ்வீட், சேலை வழங்கிய நமீதா

இந்த தீபாவளி எனக்கு டபுள் போன்ஸ்..சுகாதார பணியாளர்களுக்கு ஸ்வீட், சேலை வழங்கிய நமீதா

Oct 26, 2024 06:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 26, 2024 06:54 PM IST

  • சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் நடிகை நமீதா அந்த பகுதியை சேர்ந்த சுகாதார பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக ஸ்வீட், சேலையை பரிசாக கொடுத்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது "இந்த தீபாவளிக்கு முந்தைய நாள் எனது கணவரின் பிறந்தநாள். எனவே இந்த தீபாவளியை கொண்டாட சுகாதார பணியாளர்களுக்கு ஸ்வீட் மற்றும் சேலை பரிசாக கொடுத்துள்ளேன். தினந்தோறும் எங்கள் பகுதிகளில் அவர்கள் தங்களது பணியை சரியாகவும், சுத்தமாகவும் செய்து வருவதை கவனித்துள்ளேன். எனவே அவர்களுக்கு நன்றியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக தீபாவளி பரிசு கொடுத்துள்ளேன்.தாயாக ஆன பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்கள் அடைந்துள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக வெளியே தலைகாட்டாமல் இருந்தேன். தற்போது பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட விரும்புகிறேன்" என்றார்.

More