வீக் எண்டை கடந்தும் அள்ளிக்குவிக்கும் புஷ்பா 2! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! 5 ஆவது நாள் வசூல் நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வீக் எண்டை கடந்தும் அள்ளிக்குவிக்கும் புஷ்பா 2! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! 5 ஆவது நாள் வசூல் நிலவரம்!

வீக் எண்டை கடந்தும் அள்ளிக்குவிக்கும் புஷ்பா 2! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! 5 ஆவது நாள் வசூல் நிலவரம்!

Suguna Devi P HT Tamil
Dec 10, 2024 07:35 AM IST

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 ஆம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் 5 ஆவது நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வீக் எண்டை கடந்தும் அள்ளிக்குவிக்கும் புஷ்பா 2! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! 5 ஆவது நாள் வசூல் நிலவரம்!
வீக் எண்டை கடந்தும் அள்ளிக்குவிக்கும் புஷ்பா 2! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! 5 ஆவது நாள் வசூல் நிலவரம்!

புஷ்பா 2 தி ரூல் பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்

Sacnilk.com இணைய தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி இப்போது புஷ்பா 2 தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 590 கோடிகளைத் தாண்டியுள்ளது . செவ்வாய்கிழமைக்குள் மேலும் இன்றைய வசூல் ரூ.600 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

திங்களன்று மட்டும் புஷ்பா 2 திரைப்படம் ரூ. 65.1 கோடி வசூலித்து இருந்தது. கடந்த வெள்ளிக் கிழமையன்று ரூ. 93.8 கோடியும், சனிக்கிழமை ரூ. 119.25 கோடியும் வசூலித்த படம் . ஞாயிற்றுக்கிழமை, புஷ்பா 2 காட்டுத்தீ போல் பரவியது, ரூ.141.05 கோடி வசூலித்தது. திங்கட்கிழமை வசூலைக் கணக்கிட்டால், புஷ்பா 2 இப்போது 5 நாட்களில் மொத்தமாக ரூ.594.1 கோடி வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுன் படம் டிசம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2: திங்களன்று தெலுங்கு மாநிலங்களில் உள்ள 38.33 சதவீத தியேட்டர்களைஆக்கிரமிப்பு செய்து இருந்தது. அதன் ஹிந்தி ஆக்கிரமிப்பு இன்னும் சிறப்பாக, 40.11 சதவீதமாக இருந்தது.

புஷ்பா 2

இந்தப் படத்தில் அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக  ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான  புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது. 

புஷ்பா 2: தி ரூல் படத்திற்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும்  இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்தது. மேலும் புஷ்பா 2 படமே இதுவரை அதிக வசூல் செய்த படமாகும்.  இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது .

படத்தின் வெற்றி குறித்து அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் தனது நன்றியைத் தெரிவித்தார். படத்தின் ஸ்டில் ஒன்றைப் பகிர்ந்துகொண்டு, “கங்கம்மா தளி ஆசீர்வாதங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.