தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Travel Tips: தனியாக டிராவல் செய்ய விரும்பும் பெண்களுக்கான பயனுள்ள டிப்ஸ்!

Travel Tips: தனியாக டிராவல் செய்ய விரும்பும் பெண்களுக்கான பயனுள்ள டிப்ஸ்!

Manigandan K T HT Tamil
Apr 09, 2023 02:43 PM IST

தனியாகப் பயணம் செய்வது சிலருக்கு அச்சமாகவே இருக்கும். குறிப்பாக முதல் முறை பயணிப்பவர்களுக்கு சற்று தயக்கம் இருக்கும்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

சமீப ஆண்டுகளில், தனியாகவே பெண்கள் பயணிக்க தொடங்கிவிட்டனர். ஏனெனில் நவ நாகரீகப் பெண்கள் சாகசம், சுதந்திரம் மற்றும் புதிய அனுபவங்களை நாடுகின்றனர்.

இருப்பினும், தனியாகப் பயணம் செய்வது சிலருக்கு அச்சமாகவே இருக்கும். குறிப்பாக முதல் முறை பயணிப்பவர்களுக்கு சற்று தயக்கம் இருக்கும்.

சரியான திட்டமிடல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், சோலோ டிராவல் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அனுபவமாக இருக்கும்.

சரியான இலக்கைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து, அறிமுகமில்லாத பகுதிகளுக்குச் செல்வது வரை, இந்த உதவிக்குறிப்புகள், பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் சோலோ டிராவல் சாகசங்களைத் தொடங்கத் தயாராக இருக்க உதவும்.

ஜம்பின் ஹைட்ஸ் இயக்குநர் நிஹரிகா நிகம், பெண்களுக்கான சுவாரஸ்யமான சோலோ பயண அனுபவத்தை உறுதிப்படுத்த உதவும் சில குறிப்புகளை இந்துஸ்தான் டைம்ஸ் லைஃப்ஸ்டைல் பிரிவுக்காக பகிர்ந்து கொண்டார்.

அவை பின்வருமாறு:

1. முன்கூட்டியே திட்டமிடல்

தன்னிச்சையாக நம்மால் செயல்பட முடியும் என்பது சோலோ பயணத்தின் சலுகைகளில் ஒன்றாக இருந்தாலும், சில அடிப்படைகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வழக்கமான போக்குவரத்து முறை என்ன? இரவில் சாலைகள் எவ்வளவு நெரிசலாக இருக்கும்? நீங்கள் விரும்பும் இடங்களில் இருந்து உங்கள் தங்குமிடம் எவ்வளவு தொலைவில் உள்ளது? இவையெல்லாம் உங்கள் பணத்தையும் நேரத்தையும் கணக்கிட உதவும்.

2. எடுத்துச் செல்ல வேண்டியவை

பெப்பர் ஸ்பிரேவை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். பொது கழிவறைகளுக்கு நாம் செல்ல வேண்டி நேரிடலாம் என்பதால் சானிடைசர்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். பணத்தை கையில் கொஞ்சமாவது வைத்திருக்க வேண்டும். சிக்னல் இல்லாத இடங்கள் ஏதாவது வருமா என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

3. அட்வென்சர்

அட்வென்சர் ஆபரேட்டர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அவர்களின் நிபுணத்துவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சான்றுகள், செயல்பாடுகளின் ஆண்டுகள் மற்றும் அவற்றின் பாதுகாப்புத் தரங்களை சரி பாருங்கள்.

4. தங்குமிடம்

வாடகை குறைவான இடங்களை பார்க்கும்போது சம்பந்தப்பட்ட ஹோட்டலின் ரிவியூக்களை பாருங்கள். ஊருக்கு வெளியே தனித்தீவில் இருப்பது போல் ஏதாவது ஹோட்டல்களை நீங்கள் கண்டால் அங்கே செல்ல வேண்டாம். வேறு ஹோட்டலை நாடுங்கள்.

புதிய நபர்களைச் சந்திப்பதற்கு விடுதிகள் சிறந்தவை.

5. குளிர்பானங்கள் வாங்கும்போது எச்சரிக்கை

தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை நீங்கள் சீலிடப்பட்ட நிலையிலேயே வாங்கி பருகுங்கள். அதுவே பாதுகாப்பானது.

"உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதும், உத்திகளை வகுத்துக்கொள்வதும், நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தயாராக இருக்க உதவும். இந்த நாட்களில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு ஏற்ற பல ஹாஸ்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

நீங்கள் அதைப் பற்றி ஆய்வு செய்து ரிவ்யூக்களை சரிபார்க்கலாம். மேலும், ஹோம்ஸ்டே போன்றவையும் நல்லது.

உங்கள் அன்புக்குரியவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பற்றி அறிந்திருப்பதை உறுதிசெய்வதற்காக, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர்களுடன் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

தனிப்பயணம் எப்போது உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன்!” என்றார் நிஹரிகா.

WhatsApp channel

டாபிக்ஸ்