Side Effects of Masturbation : சுயஇன்பம் அளவாக நல்லது என்றாலும், மிஞ்சும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
Side Effects of Masturbation : சுயஇன்பம் ஆழ்ந்த உறக்கம், மனஅழுத்தத்தில் இருந்து நிவாரணம், மனநிலை மாற்றம், வலி நிவாரணம், செக்ஸ்வல் திருப்தி என பல்வேறு நன்மைகளைக் கொடுத்தாலும், அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
அதிகம் செய்யாத சுய இன்பம் உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. அது நல்ல உறக்கம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
பிறப்புறுப்புகளை தூண்டி தங்களுக்கு தாங்களாவே செக்ஸ்வல் இன்பத்தை அளித்துக்கொள்வது சுய இன்பம் எனப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அதை செய்வார்கள் மற்றும் சிலர் அதுகுறித்து அதிகம் பேசுவார்கள். பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரியஸ் என்ற உறுப்பை தூண்டுவதன் மூலம் பெண்களும், பீனிஸை தூண்டுவதன் மூலம் ஆண்களும் சுய இன்பம் பெறமுடியும்.
ஆர்கஸம் கிடைத்தவுடன் நிறுத்தப்படுகிறது. இது செக்ஸ்வல் திருப்தியை மட்டும் கொடுக்கவில்லை. மனஅழுத்தத்தை குறைக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. நல்ல உறக்கத்துக்கும் வழிவகுக்கிறது.
சுய இன்பம் குறித்து சில எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்த கட்டுக்கதைகளும் நிறைய உள்ளது. அதனால் இதுகுறித்து பேசுவது அல்லது செய்வது குற்றமாகவும், அவமானமாகவும் கருதப்படுகிறது. சில கலாச்சாரங்களில் இது உடல் மற்றும் மனரீதியான அவமானமாக கருதப்படுகிறது.
செக்ஸ்வல் இன்பத்துக்காக நாமே நமது பிறப்புறுப்புக்களை தூண்டுவது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் கூறுவது என்ன?
இது பொதுவானது என்றும், 65 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் இதைச் செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. சுயஇன்பம் செய்வதற்கு வயது மற்றும் பாலினம் வேறுபாடு இல்லை.
சுயஇன்பம் ஆழ்ந்த உறக்கம், மனஅழுத்தத்தில் இருந்து நிவாரணம், மனநிலை மாற்றம், வலி நிவாரணம், செக்ஸ்வல் திருப்தி என பல்வேறு நன்மைகளைக் கொடுத்தாலும், அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான், அது இந்த சுயஇன்பத்துக்கும் பொருந்தும். சுயஇன்பத்தை அளவாக அனுபவிக்கும்போது, அது உங்களுக்கு மேற்கண்ட நன்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சுயஇன்பம் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்
உடல் ரீதியான அசவுகர்யங்கள்
பிறப்புறுப்பில் அதிகளவில் தூண்டி சுயஇன்பம் கொள்ளும்போது, அது உடலில் கால் வலி, இடுப்பு வலி போன்ற அசவுகர்யங்களை ஏற்படுத்துகிறது. மற்ற உடல் ரீதியான நடவடிக்கைகளைப்போல் அதிகம் செய்யும்போது இதுவும் உடல் சோர்வை ஏற்படுத்துகிறது.
அன்றாட வாழ்க்கையில் தலையீடு
சுயஇன்பம் அதிகமாகும்போது, அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கச் செய்கிறது. உங்களின் வழக்கமான பணிகளை பாதிப்பதுடன், மற்றவர்களுடன் நீங்கள் தொடர்புகொள்வதை தடுக்கிறது. உங்களை பொறுப்புகளை தட்டிக்கழிக்கச் செய்கிறது.
இதனால் உங்களின் முக்கிய வேலைகள் தடைபடுகிறது. ஒட்டுமொத்த உடல்நலனுக்கு, செக்ஸ்வல் வாழ்க்கையும் தேவை. மற்றவற்றையும் கவனிக்கவேண்டும். இரண்டும் சமமாகச் செல்லும்போதுதான் வாழ்க்கை அழகாக இருக்கும்.
குற்றவுணர்ச்சி அல்லது அவமானம்
சமூக கட்டுப்பாடுகள், கலாச்சார நம்பிக்கைகள், மதபோதனைகள் என அனைத்தும், சுயஇன்பத்தை குற்றஉணர்வாகவும், அவமானமாகவும் சித்தரிக்கின்றன. ஆனால் மனிதர்களின் செக்ஸ்வல் வாழ்வில் இது மிகவும் இயல்பான இயற்கையான ஒன்றுதான்.
ஆனால் சமூகம் இப்படி சித்தரித்து வைத்திருக்கும்போது, நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் செக்ஸ்வல் இன்பத்துக்கு, இவை குறித்து முழுமையாக தெரிந்துகொண்டு அதன்பின் அளவாக செய்து மகிழ்ந்திருக்கவேண்டும்.
உறவில் எதிர்மறையான பாதிப்பு
நீங்கள் துணை இல்லாமல் இருக்கும்போது உங்களுக்கு எப்போதாவது செய்யும் சுய இன்பம் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் ஒருவருடன் செக்ஸ்வல் உறவில் இருக்கிறீர்கள் என்றால், அது அந்த உறவில், திருப்தியின்மை மற்றும் போதாமையை ஏற்படுத்தும்.
எனவே சம புரிதல், திறந்த உரையாடல் மூலம் நீங்கள் சிலவற்றை சரிசெய்துகொள்ளவேண்டும். செக்ஸ்வல் தேவைகள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை ஆரோக்கியமான வாழ்வை அளிப்பதற்கான திறவுகோல்கள் ஆகும். அது அவர்களின் உறவை முழுமையாக்கும்.
சுயஇன்பம் என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. அதை அவர்கள் செய்யாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். பெரும்பாலானவர்களுக்கு சுயஇன்பம் என்பது வழக்கமான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கலாம்.
சிலர் துணை இல்லாமல் சுயஇன்பத்தில் ஈடுபடுவார்கள் அல்லது சிலருக்கு துணை அருகில் இருக்கமாட்டார்கள் என்பதால் சுயஇன்பம் பெறுவார்கள்.
எனினும், இது அன்றாட வாழ்க்கையில் தலையிடவே செய்கிறது. துன்பம் தருகிறது, கட்டாயத்துக்கு அழைத்துச் செல்கிறது. இதனால் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
எனவே உங்கள் மீதான அக்கறை, உரையாடல் மற்றும் செக்ஸ் குறித்த ஆரோக்கியமான புரிதல் ஆகியவை தேவை.
டாபிக்ஸ்