Green Space : சுட்டெரிக்கும் வெயில்; அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சென்னை! என்ன செய்வது? – வழிகாட்டும் நிபுணர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Space : சுட்டெரிக்கும் வெயில்; அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சென்னை! என்ன செய்வது? – வழிகாட்டும் நிபுணர்கள்!

Green Space : சுட்டெரிக்கும் வெயில்; அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சென்னை! என்ன செய்வது? – வழிகாட்டும் நிபுணர்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 07, 2024 06:22 PM IST

Green Space : சுட்டெரிக்கும் வெயிலால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சென்னையை காக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்.

Green Space : சுட்டெரிக்கும் வெயில்; அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சென்னை! என்ன செய்வது? – வழிகாட்டும் நிபுணர்கள்!
Green Space : சுட்டெரிக்கும் வெயில்; அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சென்னை! என்ன செய்வது? – வழிகாட்டும் நிபுணர்கள்!

ஆனாலும், புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்த நாம் மரங்களை நடுவது மட்டுமே தீர்வாகாது. மேலும் சில நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால்தான் நமது எதிர்கால சந்ததிக்கு நாம் வளமான பூமியை பரிசளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நாம் நமது சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் அசையும், அசைய சொத்துக்களைவிட, அவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாக பூமிவை விட்டுச்செல்வதுதான் நல்லது என்று சமூகஆர்வலர்களும் கூறுகிறார்கள். எனவே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் என்ன செய்வது என்று தெரிந்துகொள்ள நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்.

சென்னையின் பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும்

1961-2021 வரை புவிவெப்பமடைதல் பிரச்னை அதிகரித்து வருவதால் வெப்ப பாதிப்பு நாட்கள் குறிப்பாக மார்ச்-ஆகஸ்ட் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

2021-23 இடைப்பட்ட காலத்தில் வெப்ப பாதிப்பு நாட்கள் சராசரியாக ஆண்டுக்கு 300 நாட்கள் என அதிகரித்ததால் நாள் ஒன்றுக்கு 3-4 மணி நேரம் உற்பத்தி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதால், தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் பாதிக்காவண்ணம் சூழல் பிரச்னைகளுக்கு (அதிவெப்ப நாட்கள் அதிகரிப்பது) தீர்வு காண்பது அவசியமாகிறது.

பசுமை பரப்பு – ஒரு ஒப்பீடு

தற்போதைய சென்னையின் பசுமை பரப்பு-5.3 சதவீதம் மட்டுமே.

ஹைதராபாத்-72.9 சதவீதம்

மும்பை-25.1 சதவீதம்

டெல்லி-12.61 சதவீதம்

மேலும் நகர்புறமாதல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் நடந்தேறி வருகிறது.

சிறு அளவு வெப்பம் அதிகரித்தாலும், தமிழகத்தில் மக்களின் வாழ்வும், பல்லுயிர்பெருக்கமும், சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். பரந்தூரில் 27 சதவீத பரப்பு ஈரநிலங்கள் என இருந்தும், ஒரு ஏக்கர் ஈரநிலம் 81-216 மெட்ரிக் டன் கார்பனை உள்வாங்கும் திறன் கொண்டது என அரசு அறிந்தும், சென்னையின் வெள்ள பாதிப்பை மேலும் அதிகரிக்கும் பரந்தூர் விமானநிலையத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து நடைமுறைப்படுத்த முனைப்பு காட்டுவது எப்படி சரியாகும்?

தமிழ்நாடு நகர்ப்புற பசுமைத் திட்டம், Green Climate Company போன்றவை ஈரநிலங்களை காக்க வேண்டும் என முனைப்பு காட்டினாலும், பரந்தூர் விமானநிலையம் ஈரநிலங்களை அழித்து உருவாக்க தமிழக அரசு முற்படுவதை கண்டிக்க வேண்டாமா?

மரங்கள் நடுவதால் பயன் உண்டா?

Green Tamilnadu Mission மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழகம் முன்னெடுத்தாலும், அவற்றால் இயற்கை வனப்பரப்பை போன்று பல்லுயிர்பெருக்கம் அதிகமாவதை உறுதிபடுத்த முடியாது.

தமிழக அரசு அனைத்து மெட்ரோ நகரங்களிலும், பசுமைத் திட்டங்களை ஏற்படுத்தும் கொள்கை முடிவுகளை எடுக்க இருப்பது நல்ல விஷயம் என்றாலும், சென்னையின் விரிவாக்கம் என்பது பசுமை பரப்பையும், நீர்நிலைகளையும் காவு வாங்கியுள்ளதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

பசுமை பரப்பை அதிகரிப்பதை தமிழக அரசு உறுதிசெய்தால் மட்டுமே, வெப்ப பாதிப்பை குறைத்து மக்களை காக்க முடியும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.