தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  5 Nutrients : மன அழுத்தத்தை குறைக்க உதவும் 5 ஊட்டச்சத்துக்கள்!

5 Nutrients : மன அழுத்தத்தை குறைக்க உதவும் 5 ஊட்டச்சத்துக்கள்!

Divya Sekar HT Tamil
Oct 19, 2023 11:20 AM IST

மன ஆரோக்கியத்திற்கு ஓய்வு, புத்துணர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்ல, ஊட்டச்சத்தும் தேவை. நீங்கள் பதட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இங்கே நீங்கள் சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்க உதவும் 5 ஊட்டச்சத்துக்கள்
மன அழுத்தத்தை குறைக்க உதவும் 5 ஊட்டச்சத்துக்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

வைட்டமின் டி

 வைட்டமின் டி இம்யூனோமோடூலேட்டரி, நியூரோபிராக்டிவ் மற்றும் நியூரோட்ரோபிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சரியான அளவில் கிடைக்காதபோது அதனால் நாம் பல உடல் நலப் பாதிப்புகளை சந்திக்கக்கூடும். எனவே உடலுக்கு நன்மை பயக்கும் சில வைட்டமின் டி உணவுகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

NAC

NAC இன் அழற்சி-எதிர்ப்பு செயல்பாடு நாள்பட்ட அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. மூளையில் உள்ள குளுட்டமேட் எனப்படும் நரம்பியக்கடத்தியின் சமநிலையை என்ஏசி பாதிக்கலாம்.

மக்னீசியம்

 நரம்பியக்கடத்திகள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் மக்னீசியம் ஈடுபட்டுள்ளது. இது மூளையில் உற்சாகம் மற்றும் தடுப்பு சமிக்ஞைகளை சமநிலைப்படுத்த உதவுகிறது. கவலை, பதட்ட அறிகுறிகளைக் குறைக்கிறது. மக்னீசியம் காமா-அமினோபியூட்ரிக் அமிலத்தின் (GABA) உற்பத்தியைத் தூண்டலாம்.

புரோபயாடிக்குகள்

 புரோபயாடிக்குகள் சாதாரண நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளன. உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நல்ல நரம்பியக்கடத்திகளை உருவாக்கவும் உதவும்.

ஒமேகா 3

ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நியூரோஜெனீசிஸ், நியூரோ டிரான்ஸ்மிஷன் மற்றும் நியூரோஇன்ஃப்ளமேஷன் ஆகியவற்றுடன் தொடர்புடைய பரந்த அளவிலான உடலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக eicosapentaenoic (EPA) மற்றும் docosahexaenoic அமிலம் (DHA)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்