Ragi Paniyaram : சத்துள்ள ராகி குழிப்பணியாரம்; கருப்பட்டியுடன் இனிப்பு; தாளிப்புடன் காரம் இரு வகையிலும் செய்யலாம்!-ragi paniyaram nutritious ragi paniyaram sweetened with salty with talipu can be done both ways - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Paniyaram : சத்துள்ள ராகி குழிப்பணியாரம்; கருப்பட்டியுடன் இனிப்பு; தாளிப்புடன் காரம் இரு வகையிலும் செய்யலாம்!

Ragi Paniyaram : சத்துள்ள ராகி குழிப்பணியாரம்; கருப்பட்டியுடன் இனிப்பு; தாளிப்புடன் காரம் இரு வகையிலும் செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Sep 07, 2024 04:18 PM IST

Ragi Paniyaram : சத்துள்ள ராகி குழிப்பணியாரம், கருப்பட்டியுடன் இனிப்பு, தாளிப்புடன் காரம் என இரு வகையிலும் செய்ய முடியும். இதை நீங்கள் காலை உணவுக்கே பயன்படுத்தலாம்.

Ragi Paniyaram : சத்துள்ள ராகி குழிப்பணியாரம்; கருப்பட்டியுடன் இனிப்பு; தாளிப்புடன் காரம் இரு வகையிலும் செய்யலாம்!
Ragi Paniyaram : சத்துள்ள ராகி குழிப்பணியாரம்; கருப்பட்டியுடன் இனிப்பு; தாளிப்புடன் காரம் இரு வகையிலும் செய்யலாம்!

தேவையான பொருட்கள்

ராகி இட்லி மாவு – 2 கப்

வழக்கமான இட்லி மாவில் ராகி மாவை கலந்துகொள்ளவேண்டும் அல்லது அரிசி, உளுந்து, ராகி மூன்றையும் 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து ஊறவைத்து சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

பெருங்காயம் – சிறிது

துருவிய கேரட் – ஒரு கப்

துருவிய தேங்காய் – ஒரு கப்

(கேரட் மற்றும் தேங்காயை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்)

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். இவை பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

ராகி மாவில் இந்த தாளிப்பை சேர்த்து கலக்கவேண்டும். துருவிய கேரட் மற்றும் தேங்காயையும் சேர்த்து நன்றாக மாவை கலந்து அரைமணி நேரம் ஊறவிடவேண்டும்.

பணியாரம் சட்டியை சூடாக்கி அதில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு மாவையும் ஒவ்வொரு குழியிலும் சேர்க்கவேண்டும். குறைவான தீயில் இவற்றையெல்லாம் வேகவிடவேண்டும். பணியாரத்தை ஊற்றியவுடன், அதை மூடிபோட்டு மூடலாம். அப்போதுதான் அனைத்தும் சரியாக ஒரே அளவில் வேகும்.

ஒரு புறத்தில் வெந்தவுடன், பணியார குத்தியால் திருப்பிவிட்டு, மற்றொரு பறம் வேகவிட்டு எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவேண்டும்.

இருபுறமும் பொன்னிறமானவுடன், இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி மற்றும் தேங்காய் சட்னி வைத்து பரிமாற வேண்டும். இதற்கு கெட்டியான சாம்பாரும் நன்றாக இருக்கும். தேங்காய், வெங்காயம் சேர்த்து செய்த காரச்சட்னியும் நன்றாக இருக்கும்.

இனிப்பு பணியாரம் வேண்டுமென்றால், இந்த தாளிப்பை நிறுத்திவிட்டு, நெய்யில் முந்திரி, பாதாம், திராட்சை, தேங்காய் துருவலை வதக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கருப்பட்டி அல்லது வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்க்கவேண்டும். நாட்டுச்சர்க்கரையும் பயன்படுத்தலாம். இவையனைத்தையும் சேர்த்து மாவை தயார் செய்து, அதோபோல் ஒவ்வொன்றாக சுட்டு எடுத்தால் இனிப்பு பணியாரமும் தயார். உங்களுக்கு பிடித்த சுவையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.