Covid Vaccine : கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வு எப்படி இருக்க வேண்டும்? – விளக்கும் மருத்துவர்!
Covid Vaccine : கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என மருத்துவர் விளக்குகிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மிகச் சமீபத்தில், ‘கொரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்களிடம் அதிகரித்து வரும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை என்றும், கொரோனா நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், பரம்பரையிலேயே திடீர் மரணம் நிகழ்ந்துள்ளதும், பிற வாழ்சூழலுக்கும் (ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்வதற்கும், பழக்கமில்லாத கடும் உடல் உழைப்பை மேற்கொண்டதற்கும்) தொடர்புள்ளது என தெரிவித்தது.
கர்ப்பப்பை வாய் தடுப்பூசி இந்தியாவிற்கு புழக்கத்தில் வர 2008ம் ஆண்டே, அனுமதி பெற்ற நிலையில், 2007ம் ஆண்டே ICMR எந்த வித அறநெறிகளையும் பின்பற்றாமல், HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்திய PATH நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு அதை புழக்கத்தில் கொண்டுவர முயற்சி எடுத்தது எந்த விதத்திலும் சரியானதல்ல என அறிக்கை எண் 72 சுட்டிக்காட்டியதோடு, PATH நிறுவனத்திற்கு ஆதாரங்களின்றி ICMR உதவியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும் அறிக்கை 72ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆக, ICMR க்கு தடுப்பூசி விசயத்தில் வணிக நலனே முக்கியம் என்பது தெளிவு. கொரோனா தடுப்பூசி, இளைஞர்கள் மத்தியில் திடீர் மரணம் தொடர்பான ஆய்வில் குறைப்பாடுகள் உள்ளன.
