தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Prostate Cancer : ஆண்களை மட்டும் தாக்கும் புற்றுநோய்.. அறிகுறிகள் என்ன.. எவ்வாறு தடுக்கலாம்!

Prostate Cancer : ஆண்களை மட்டும் தாக்கும் புற்றுநோய்.. அறிகுறிகள் என்ன.. எவ்வாறு தடுக்கலாம்!

Divya Sekar HT Tamil
Apr 21, 2023 12:38 PM IST

ஆண்களை மட்டும் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து இதில் காண்போம்.

புரோஸ்டேட் புற்றுநோய்
புரோஸ்டேட் புற்றுநோய்

ட்ரெண்டிங் செய்திகள்

நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், தோல் மெலனோமா, சிறுநீர்ப்பை புற்றுநோய், ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா, சிறுநீரகம் மற்றும் சிறுநீரக இடுப்பு புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், லுகேமியா, கணைய புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகிய புற்றுநோய்கள் அதிகளவில் உள்ளதாக ஒரு ஆய்வு கூறிகிறது.

இதில் ஆண்களை மட்டும் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன என்பது குறித்து இதில் காண்போம். புரோஸ்டேட் என்பது ஆண்களில் சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய வால்நட் வடிவ சுரப்பியாகும். இந்த சுரப்பியானது விந்தணுக்களுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் கடத்தும் விந்து திரவத்தை உற்பத்தி செய்கிறது. இவற்றின் செயல்பாடுகள் முறையாக நடைபெறாத போது தான் புற்றுநோயின் பாதிப்பு ஆரம்பமாகிறது.

ஆண்களுக்கு இடையே ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிவது என்பது அவ்வளவு எளிதில்ல.

எனவே சிறுநீர் பிரச்சனைகள் இருந்தால் அல்லது சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதைக் கண்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

உலகளவில் ஏழு ஆண்களில் ஒருவர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார் எனவும் ஆண்களிடையே அடிக்கடி ஏற்படும் புற்றுநோயாக இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களுக்கு 50 வயதிற்குப் பிறகு புரோஸ்டேட் சுரப்பியின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் அதன் வழியாக செல்லும் சிறுநீர்க்குழாய் மீது அழுத்தம் ஏற்படலாம். வயதானவர்களால் இந்த வழக்கமான அறிகுறிகள் மாற்றம் ஏற்படும் போது இந்த பாதிப்பு அதிகமாகிறது.

புரோஸ்டெட் புற்றுநோயின் அறிகுறிகள்

எடை குறைதல்

வயிற்றுவலி

எலும்பு வலி

கால் வீக்கம்

சோர்வு

ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி

விந்துவில் ரத்தம் வெளியேறுதல்

சிறுநீர் கழித்த பின்னரும், மீண்டும் சிறுநீர் வருகின்ற உணர்வு

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளனர். எனவே விழிப்புடன் இருந்தால் மட்டுமே ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

புரோஸ்டெட் புற்றுநோய் தடுக்கும் முறைகள்

ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு ஒருசில சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் தவிர்க்கலாம். தினமும் 30-45 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலமும் தவிர்க்கலாம்.

சோயா உணவுகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆண்களின் வயது அதிகரிக்கும் போது, அவர்களின் தசைகளின் அடர்த்தியும் குறையும். முட்டைகளில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளன. இந்த புரோட்டீன்கள் தசைகளின் அடர்த்தியை தக்க வைக்கும். கொழுப்புள்ள மீன்களான டூனா, சால்மன் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியமான சத்தாகும்.

பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.ஜிங்க் ஆண்களின் கருவளத்தை மேம்படுத்துவதோடு, புரோஸ்டேட் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலுக்கு ஸ்டாமினாவை வழங்குகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்