ப்ரீ மீல் ஹெர்பல் வாட்டர்! சாப்பிடும் முன் இந்த தண்ணீரை பருகுங்களேன்! உடலில் எத்தனை மாற்றங்கள் பாருங்க!
சாப்பிடும் முன்னர் பருக ஏற்ற தண்ணீர் எதுவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
சாப்பிடுவதற்கு முன்னர் நீங்கள் எந்தெந்த தண்ணீரை பருகலாம்?
சீரகத்தண்ணீர்
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் சீரகத்தைப்போட்டு காய்ச்சி வடிகட்டி அதை அவ்வப்போதும், சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னரும் பருகவேண்டும்.
துளசி தண்ணீர்
துளசியை தண்ணீரில் ஊறவைத்தும் பருகலாம் அல்லது துளசியை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரையும் பருகலாம். இதில் வேறு எதுவும் கலந்து பருகக்கூடாது.