இந்தப் பழத்தை ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால் என்னவாகும்?
உலர்ந்த திராட்சையை ஊறவைத்து அந்த தண்ணீரை பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
உலர்ந்த திராட்சை பழங்களை ஊறவைத்த தண்ணீரை நீங்கள் காலையில் எழுந்தவுடன் முதலில் குடித்தால் அதனால் உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பாருங்கள். உலர் திராட்சைப் பழங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருபவை. அதை அப்படியே சாப்பிடாமல், ஏன் ஊறவைத்து உண்ணவேண்டும். ஊறவைத்து உண்ணும்போது அதன் நன்மைகள் அதிகரிக்கும். எனவே தான் உலர்ந்த திராட்சையை ஊறவைத்து சாப்பிடவேண்டும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு கைப்பிடியளவு திராட்சையை எடுத்து ஊறவைத்துவிடுங்கள். அதிகாலை அதை அப்படியேவோ அல்லது சாறாக்கியே பருகலாம் அல்லது சாப்பிடலாம். அந்த தண்ணீரை மட்டுமாவது பருகலாம். உங்களுக்கு ஏற்ற வகையில் அதை சாப்பிட்டு விடுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆற்றலைத் தருகிறது
திராட்சையை ஊறவைத்த தண்ணீரை பருகினால், அது உங்கள் உடலுக்குத் தேவையான இயற்கை ஆற்றலைக் கொடுக்கிறது. இதில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே உங்கள் நாளை துவக்குவதற்கான சிறந்த வழியாக இது உள்ளது.
செரிமானத்தைத் தருகிறது
திராட்சையை ஊறவைத்த தண்ணீரை நீங்கள் பருகும்போது, அது உங்களுக்கு நார்ச்சத்தைத் தருகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
ஊற வைத்த திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி உங்களுக்கு ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்குகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது.
கல்லீரலில் உள்ள கழிவைப் போக்குகிறது
நீங்கள் அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உலர்ந்த திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகும்போது, அது உங்கள் கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இது உங்கள் கல்லீரலின் இயக்கத்துக்கு மிகவும் சிறந்தது. உங்கள் உடலை சுத்தம் செய்ய உதவுகிறது.
இரும்பு உறிஞ்ச உதவுகிறது
உலர்ந்த திராட்சைத் தண்ணீரை நீங்கள் பருகும்போது, அதில் உள்ள அதிக இரும்புச்சத்துக்கள், உங்கள் உடல் அதிக இரும்புச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது உங்களுக்கு சோர்வு ஏற்படாமல் காக்கிறது. இது உங்கள் ரத்த உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை இந்த உலர் திராட்சை தண்ணீருக்கு உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான இதயத்துக்கு வழிவகுக்கிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
அசிடிட்டி அளவை முறைப்படுத்துகிறது
திராட்சையை ஊறவைத்த தண்ணீரை நீங்கள் பருகும்போது, அது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை முறைப்படுத்துகிறது. இது உங்களுக்கு அமில எதிர்ப்பு ஏற்படுவதை தடுக்கிறது. வயிற்றுக்கு இதமளிக்கிறது. உங்கள் வயிற்றில் அமில அளவை முறையாகப் பராமரிக்கிறது. இதனால் உங்கள் வயிறு இதமாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
திராட்சை தண்ணீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள், குறிப்பாக வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலை வலுப்படுத்துகிறது. இது உங்கள் உடலை தொற்றுக்களில் இருந்து காக்கிறது.
உடல் எடையை பராமரிக்க உதவுகிறது
உலர் திராட்சை தண்ணீரில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இந்த தண்ணீர் உங்களின் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்