வழக்கமான எலுமிச்சை சாதம் அல்ல; இது ஸ்பெஷலானது! எப்படி செய்வது என்று பாருங்கள்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வழக்கமான எலுமிச்சை சாதம் அல்ல; இது ஸ்பெஷலானது! எப்படி செய்வது என்று பாருங்கள்! இதோ ரெசிபி!

வழக்கமான எலுமிச்சை சாதம் அல்ல; இது ஸ்பெஷலானது! எப்படி செய்வது என்று பாருங்கள்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Nov 12, 2024 10:19 AM IST

வழக்கமான எலுமிச்சை சாதம் அல்ல, இது ஸ்பெஷல் எலுமிச்சை சாதம். இதை எப்படி செய்வது என்று பாருங்கள். இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான எலுமிச்சை சாதம் அல்ல; இது ஸ்பெஷலானது! எப்படி செய்வது என்று பாருங்கள்! இதோ ரெசிபி!
வழக்கமான எலுமிச்சை சாதம் அல்ல; இது ஸ்பெஷலானது! எப்படி செய்வது என்று பாருங்கள்! இதோ ரெசிபி!

ஆனால் இது ஸ்பெஷல் எலுமிச்சை சாதம். எனவே இதை செய்வது எப்படி என்று பாருங்கள். வித்யாசாமன சுவையைத்தரும் இந்த சாதம். தினமும் ஒரு எலுமிச்சை பழத்தை உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதைச் செய்வதால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கப்

பால் – ஒரு கப்

எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

வேக வைத்த கொண்டைக் கடலை – கால் கப்

கடுகு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 3

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – ஒரு துண்டு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசி வேக வைக்கும் தண்ணீரில் பால் கலந்து வடித்து வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியை உதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க தாளிக்கவேண்டும். அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய மூன்றையும், சிறிய உரலில் சேர்த்து இடித்து சேர்த்து வதக்கவேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவேண்டும்.

எலுமிச்சை ரசம் தயார். வடித்த சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து ஆறவைத்து இந்த எலுமிச்சை ரசத்தை சேர்த்து கிளறவேண்டும்.

அடுத்து அதன் மேல் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவேண்டும். சேர்த்தால் சூப்பர் சுவையான ஸ்பெஷல் எலுமிச்சை சாதம் தயார்.

இதற்கு உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல், காளிஃப்ளவர் வறுவல் என எந்த வறுவலும் ஏற்றது. இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு பொதுவாகவே எலுமிச்சை சாதம் டிஃபன் பாக்ஸில் வைத்துக்கொடுத்தால் பிடிக்கும்.

இந்த ஸ்பெஷல் எலுமிச்சை சாதத்தை கட்டாயம் செய்துகொடுக்க அவர்கள் லன்ச் பாக்ஸை காலி செய்துவிட்டு வருவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.