தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pottukadalai Halwa : பொட்டுக்கடலை, வெல்லத்தில் அல்வாவா? - ஒரு சிறப்பான ஈவ்னிங் ஸ்னாக், குழந்தைகளும் விரும்புவார்கள்!

Pottukadalai Halwa : பொட்டுக்கடலை, வெல்லத்தில் அல்வாவா? - ஒரு சிறப்பான ஈவ்னிங் ஸ்னாக், குழந்தைகளும் விரும்புவார்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 06, 2023 12:25 PM IST

Pottukadalai Halwa : சுவையான, ஆரோக்கியமான, குழந்தைகளுக்கு பிடித்த ஈவ்னிங் ஸ்னாக் தயார். பள்ளியில் இருந்து சோர்வடைந்து வீடு வரும் குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸை கொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

குழந்தைகளை கவரும் ஈவ்னிங் ஸ்னாக் - பொட்டுக்கடலை அல்வா
குழந்தைகளை கவரும் ஈவ்னிங் ஸ்னாக் - பொட்டுக்கடலை அல்வா

ட்ரெண்டிங் செய்திகள்

வறுத்த பொட்டுக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரி செய்கிறது. வறுத்த பொட்டுக்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். நீங்கள் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால், வறுத்த பொட்டுக்கடலையை தேர்ந்தெடுங்கள்.

ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கவும், ஏராளமான நோய்களைத் தடுக்கவும் வறுத்த பொட்டுக்கடலை உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற நோய்களை தடுக்கவும் பொட்டுக்கடலை உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வறுத்த பொட்டுக்கடலையில் அதிகமுள்ள செலினியம், புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறுகிறது.

தேவையான பொருட்கள் -

பொட்டுக்கடலை – 1 கப்

வெல்லம் – 2 கப் (பொடித்தது)

ஏலக்காய் – 2

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – 2 ஸ்பூன்

செய்முறை –

பொட்டுக்கடலையை நன்றாக வறுத்து, ஆறியபின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் வெல்ல இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் நன்றாக கரைந்தபின் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குங்குமப்பூறை சுடுதண்ணீர் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். ஏலக்காயையை பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் பொட்டுக்கடலையை போட்டு நன்றாக வாசம்போகும் வரை வறுக்க வேண்டும்.

நெய்யம், பொட்டுக்கடலை மாவும் சேர்த்து நன்றாக வறுபட்டபின், அதில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த வெல்லப்பாகை சேர்க்க வேண்டும்.

நன்றாக கரண்டியால் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா போல் அனைத்தும் ஒன்றாக திரண்டு வரும்.

இறுதியாக குங்குமப்பூச் சேர்ந்து நன்றாக அல்வா போல் வரும்.

ஏலக்காய் தூவி இறக்கிவிட வேண்டும்.

சுவையான, ஆரோக்கியமான, குழந்தைகளுக்கு பிடித்த ஈவ்னிங் ஸ்னாக் தயார். பள்ளியில் இருந்து சோர்வடைந்து வீடு வரும் குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸை கொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்