தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Poondu Idli Podi: வாய்வுத் தொல்லையைப் போக்கும் பூண்டு இட்லி பொடி செய்வது எப்படி?

Poondu Idli Podi: வாய்வுத் தொல்லையைப் போக்கும் பூண்டு இட்லி பொடி செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Feb 07, 2023 11:35 AM IST

வாய்வுத்தொல்லையைப் போக்கும் பூண்டு இட்லி பொடி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

பூண்டு இட்லி பொடி
பூண்டு இட்லி பொடி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் பூண்டை பயன்படுத்தி இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்வதற்கான பொடியை செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.

பூண்டு இட்லிப் பொடி செய்யத் தேவையான பொருட்கள்-

அரை கப் தோலுரித்த பூண்டு

கால் கப் முழு உளுந்து

கால் கப் தேங்காய் துருவல்

1 டேபிள் ஸ்பூன் மல்லி விதை

1 ஸ்பூன் சீரகம்

6-8 வரமிளகாய்

அரை ஸ்பூன் பெருங்காயம் தூள்

1 ஸ்பூன் கல் உப்பு

2 கைப்பிடி கறிவேப்பிலை

3ஸ்பூன் சொட்டு நல்லெண்ணெய்

செய்முறை-

ஸ்டெப் 1

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2

தோலுரித்த பூண்டை இஞ்சி தட்டும் குழவியில் தட்டி, வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதால்,முழுமையாக வறுபடும்.கெட்டுப் போகாது.

 

ஸ்டெப் 3

வாணலியில் 2ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி,தட்டிய பூண்டை பொன்னிறம் ஆகும் வரை வறுத்து தனியே வைக்கவும். ஆறியதும்,கைகளால் அழுதினால் நொறுங்கும் அளவுக்கு வறுபட்டிருக்க வேண்டும்.

ஸ்டெப் 4

பின் அதே எண்ணையில்,உளுந்து சேர்த்து சிவக்க வறுத்து,தனியே வைக்கவும்.

ஸ்டெப் 5

பின் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியே வைக்கவும்.

ஸ்டெப் 6

1சொட்டு எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நொறுங்கும் அளவுக்கு வறுக்கவும்.

ஸ்டெப் 7

1ஸ்பூன் எண்ணெய் விட்டு,மல்லி விதை சேர்த்து வறுபட்டதும்,அதனுடன் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.

ஸ்டெப் 8

வறுபட்டதும்,அடுப்பை அணைத்து,அதே சூட்டில்,சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுபட்டதும் உளுந்துடன் சேர்த்து ஆற வைக்கவும்.

ஸ்டெப் 9

வறுத்த அனைத்தும் ஆறியதும்,மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் தேங்காய் தவிர மீதி உள்ள வறுத்த பொருட்கள் மற்றும் கல் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

ஸ்டெப் 10

பின் அதனுடன்,வறுத்த பூண்டு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.உப்பு சரிபார்க்கவும். இந்த பொடி,எண்ணெய் சேர்த்து செய்திருப்பதால் பிரிட்ஜ்ல் வைத்து 1 மாதம் வரையிலும் பயன்படுத்தலாம்.குறைவான அளவே செய்திருப்பதால் அதற்கு முன் காலி ஆகிவிடும்.

ஸ்டெப் 11

அவ்வளவுதான். மணமான,சுவையான,பூண்டுஇட்லி பொடி ரெடி. இட்லி தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், மிகவும் சுவையாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்