தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Plastic Are There So Many Dangers Due To Plastic Particles Being Deposited In The Bloodstream Trauma Study

Dangers of Plastic : பிளாஸ்டிக் குறுந்துகள்கள் ரத்தக்குழாயில் படிவதால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆய்வு

Priyadarshini R HT Tamil
Mar 16, 2024 06:17 AM IST

Dangers of Plastic : NEJM ஆய்வில், கரோடிட் பிளேக்கில் நானோபிளாஸ்டிக் உள்ளவர்களிடத்து (இல்லாதவர்களை விட) சில விஷயங்கள் பொதுவாக இருப்பது தெரியவந்துள்ளது.

Dangers of Plastic : பிளாஸ்டிக் குறுந்துகள்கள் ரத்தக்குழாயில் படிவதால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆய்வு
Dangers of Plastic : பிளாஸ்டிக் குறுந்துகள்கள் ரத்தக்குழாயில் படிவதால் இத்தனை ஆபத்துக்களா? – அதிர்ச்சி ஆய்வு

ட்ரெண்டிங் செய்திகள்

சுற்றுச்சுழலை வந்தடையும் பிளாஸ்டிக் குறுந்துகள்கள் பல்வேறு வகையில் உடம்பினுள் சென்று, ரத்தக் குழாய்கள் உட்பட பல இடங்களில் படிவதால், இரதயப் பிரச்னைகள் (Heart attack உட்பட) ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

University of Campania Luigivanvitelli in Naples, Italyக்கு கழுத்தில் உள்ள கரோடிட் ஆர்டெரி (Carotid Artery) யில் கொழுப்பின் காரணமாகவும், (Fatty Deposits), ரத்தக்குழாய்களில் துகள்களின் அடைப்பு (Plaque) காரணமாகவும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதை சரிசெய்ய வந்த 257 நோயாளிகளிடம் செய்த ஆய்வில், சில அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.

கழுத்தில் உள்ள கரோடிட் ஆர்டெரியில், கொழுப்பு, கடின துகள்கள் (Plaque) படிவதால் ரத்தக்குழாயின் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு இதயப் பிரச்னைகள், மூளை மண்டல பாதிப்பு (Stroke) ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றைத் தடுக்க அறுவைசிகிச்சை மூலம், கொழுப்பு, துகள்கள் படிதலை நீக்க வேண்டிய தேவையுள்ளது.

New England Journal of Medicine ஆய்வில் கரோடிட் ஆர்டெரியில் அறுவைசிகிச்சை செய்து அடைப்புகளை நீக்கிய பின் 257 பேரிடம் ஆய்வு செய்தபோது, நீக்கப்பட்ட அடைப்பில் (Carotid Plaque), 150 பேரிடம் (58 சதவீதம்) பிளாஸ்டிக் சிறுதுகள்களும் (5 மி.மீ. அளவிற்கு கீழான அளவு-Size), 1,000 நானோ மீட்டருக்கு கீழான நானோபிளாஸ்டிக் துகள்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

31 பேரின் கரோடிட் பிளேக்கில் (12 சதவீதம்) பாலிவினைல் குளோரைடும் அதிகமிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

NEJM ஆய்வில், கரோடிட் பிளேக்கில் நானோபிளாஸ்டிக் உள்ளவர்களிடத்து (இல்லாதவர்களை விட) சில விஷயங்கள் பொதுவாக இருப்பது தெரியவந்துள்ளது.

அவை,

அவர்கள் பெரும்பாலும் ஆண்கள்,

இள வயதினர் (Generally Younger),

ரத்தக்கொதிப்பு இல்லாதவர்கள்,

சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள்,

இதய நோய்களும், கொழுப்பு பிரச்னைகளும் (Dyslipidemia) உள்ளவர்கள்,

புகை பிடிப்பவர்கள்,

ரத்தத்தில் கிரியாடினின் அளவு அதிகம் உள்ளவர்கள்

என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கரோடிட் பிளேக்கில் பிளாஸ்டிக் குறுந்துகள்கள் உள்ளவர்களுக்கு 34 மாதம் தொடர் ஆய்வு (Follow-up) மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு இதயப் பிரச்சனை அல்லது மூளை மண்டல பிரச்னை (Stroke) அதிகம் ஏற்படுகிறதா என கண்காணிக்கப்பட்டது.

கரோடிட் பிளேக்கில் பிளாஸ்டிக் சிறுதுகள்கள், நானோ பிளாஸ்டிக்ஸ் அதிகம் இருப்பவர்களுக்கு, அவை இல்லாதவர்களைக் காட்டிலும், இறப்பை ஏற்படுத்தாத மாரடைப்பு (Non-fatal Heart attack), மூளை மண்டலம் பாதிப்பு (Stroke), வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்படும் இறப்பு, 4.5 மடங்கு அதிகம் இருப்பது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி, AIIMS, Delhi, நரம்பியல் துறை பேராசிரியர் Dr.மஞ்சாரி திரிபாதி கூறுகையில், ‘நமது சுற்றுச்சூழலில் தற்போது நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் குறுந்துகள்கள் நமது உடம்பின் நலனுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நாம் உணர்ந்து கொள்ளவும், உரிய கண்காணிப்புகளை நடைமுறைப்படுத்தி, பாதிப்புகளை குறைக்க நாம் உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துவதாகவும், இந்த ஆய்வுக் கட்டுரை உள்ளது’ என எச்சரிக்கை விடுத்துள்ளதை அரசு மற்றும் சுகாதாரத் துறை கருத்தில்கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை (உதாரணம். மஞ்சப்பை) உடனடியாக நடைமுறைப்படுத்தவும் தேவையுள்ளது.

மக்கள் பங்களிப்போடு அரசு அதை நடைமுறைப் படுத்தினால் நல்ல பலன்கள் கிட்டும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

 

WhatsApp channel

டாபிக்ஸ்