உடலுக்கு உறுதி தரும் வேர்க்கடலை சட்னி! கூடுதலாக இட்லி, தோசைகள் செய்ய வேண்டிவரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலுக்கு உறுதி தரும் வேர்க்கடலை சட்னி! கூடுதலாக இட்லி, தோசைகள் செய்ய வேண்டிவரும்!

உடலுக்கு உறுதி தரும் வேர்க்கடலை சட்னி! கூடுதலாக இட்லி, தோசைகள் செய்ய வேண்டிவரும்!

Priyadarshini R HT Tamil
Nov 15, 2024 05:10 PM IST

உடலுக்கு உறுதி தரும் வேர்க்கடலை சட்னியை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். மேலும் கூடுதலாக இட்லி, தோசைகளையும் சாப்பிடுவீர்கள். இதனால் அவற்றை அதிகளவில் செய்யத்தோன்றும்.

உடலுக்கு உறுதி தரும் வேர்க்கடலை சட்னி! கூடுதலாக இட்லி, தோசைகள் செய்ய வேண்டிவரும்!
உடலுக்கு உறுதி தரும் வேர்க்கடலை சட்னி! கூடுதலாக இட்லி, தோசைகள் செய்ய வேண்டிவரும்!

மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கடலை மூளைக்கு மிகவும் நல்லது. கடலையில் உள்ள வைட்டமின் ஈயை பயன்படுத்தி, நமது மூளையில் நிகழும் வேதியல் மாற்றங்களில் இருந்து பாதுகாக்கிறது. அது வழக்கமான மூளை இயக்கம் மற்றும் நினைவாற்றலுக்கு வழிவகுக்கிறது. ஆண் மற்றும் பெண்களில் கருவுறுதல் தன்மையை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. கடலையில் டிரிட்டோஃபான் உள்ளது. இது செரோட்டினின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்க உதவும் அமினோ அமிலம் ஆகும். இது மனஉளைச்சலை போக்க உதவுகிறது. எனவே இதை கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் செரோட்டினின் அளவை அதிகரித்து மனஉளைச்சலை போக்குகிறது.

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கமலை – முக்கால் கப்

வர மிளகாய் – 2

புளி – சிறிதளவு

பூண்டுப் பல் – 4

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

வர மிளகாய், புளி இரண்டையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். வேர்கடலையை கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, வரமிளகாய், புளி, உப்பு என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் கடாயை சூடாக்கி, நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். இதை சட்னியில் சேர்த்து கலந்துவிடவேண்டும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சுவையான வேர்க்கடலை சட்னி தயார். இதை சாதத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால், மீண்டும், மீண்டும், நீங்களே விரும்பி சாப்பிடுவீர்கள். மேலும் வேர்க்கடலை உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடியது என்பதால், இந்த சட்னியை நீங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். எனவே இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.