Papad Thoran : அப்பளம் தொவரன் செய்வது எப்படி? வித்யாசமான சைட் டிஷ் வேண்டுமெனில் ட்ரை பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Papad Thoran : அப்பளம் தொவரன் செய்வது எப்படி? வித்யாசமான சைட் டிஷ் வேண்டுமெனில் ட்ரை பண்ணுங்க!

Papad Thoran : அப்பளம் தொவரன் செய்வது எப்படி? வித்யாசமான சைட் டிஷ் வேண்டுமெனில் ட்ரை பண்ணுங்க!

Priyadarshini R HT Tamil
Apr 30, 2024 08:00 AM IST

Papad Thovaran : அப்பளத்தில் ஒரு வித்யாசமான சைட் டிஷ் செய்யமுடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Papad Thoran : அப்பளம் தொவரன் செய்வது எப்படி? வித்யாசமான சைட் டிஷ் வேண்டுமெனில் ட்ரை பண்ணுங்க!
Papad Thoran : அப்பளம் தொவரன் செய்வது எப்படி? வித்யாசமான சைட் டிஷ் வேண்டுமெனில் ட்ரை பண்ணுங்க! (Thattukada)

தேவையான பொருட்கள்

அப்பளம் – 5

சின்ன வெங்காயம் – 7 (பொடியாக நறுக்கியது)

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய்த்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 1

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் அப்பளங்களை ஒரு கத்தரிக்கோல் வைத்து சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு, சூடானதும் அதில் நறுக்கிய அப்பளங்களை சேர்த்து பொரித்துக் கொள்ளவேண்டும்.

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய்விட்டு, சூடானதும் அதில் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் சிறிது உப்பும், மிளகாய்த்தூளும் சேர்த்து லேசாக வதக்கி அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தொடர்ந்து வதக்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

பின் பொரித்த அப்பளங்களை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். கரண்டியால் லேசாக அப்பளங்களை உடைத்துக் கொள்ளவேண்டும். அப்பளங்கள் தேங்காய் விழுதோடு நன்கு கலந்ததும் இறக்கவேண்டும்.

இந்த அப்பள தொவரன் வித்யாசமான சைட் டிஷ் மட்டுமல்ல, சுவையானதும்கூட. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான சைட்டிஷ்.

சாம்பார், ரசம், காரக்குழம்பு என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். விருந்துகளில் பரிமாற வித்யாசமான சைட் டிஷ்ஷாக இருக்கும்.

வெறும் அப்பளமாகவே சாப்பிட்டுவிடலாம். ஆனால் இதுபோல் செய்து சாப்பிடும்போது அப்பளத்துக்கே கூடுதல் சுவை கிடைக்கும்.

அப்பளபூவிலும் இதுபோல் செய்ய முடியும். அதை இரண்டாக மட்டுமே அல்லது முழுதாகவோ பொரித்தெடுத்து இதுபோல் செய்யலாம். அதுவும் சுவையாக இருக்கும்.

நன்றி – விருந்தோம்பல்.

அப்பளத்தின் நன்மைகள்

கலோரிகள் குறைந்த உணவு 

அப்பளத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால், இது உடல் எடையை அதிகரிக்காது. அப்பளம் என்றாலே விருந்துதான் நியாபகத்துக்கு வரும்.

செரிமானத்தை தூண்டுகிறது 

உங்களுக்கு செரிமான பிரச்னைகள் இருந்தால், அப்பளத்தை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் செரிமான எண்சைம்களை தூண்டி, செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும் வயிறு தொடர்பான மற்ற பிரச்னைகளை சரிசெய்வதுடன், குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது.

குளூட்டன் ஃப்ரி

புரதச்சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடித்தது. ஆனால் இதை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. இதை எண்ணெயில் பொரித்ததை சாப்பிடுவதைவிட சுட்டு சாப்பிடுவது நல்லது.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

உங்கள் உடல் மற்றும் குடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் தேவையானது. எனவே நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை அன்றாடம் உட்கொள்ளுங்கள். அப்பளத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் குடல் இயங்குவதற்கு உதவும். இதனால் உங்கள் உடலை சரியான எடையில் பராமரிக்க அப்பளங்கள் உதவுகிறது.

ஆரோக்கியம் நிறைந்த ஸ்னாக்ஸ்

அப்பளம் ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். இதை நீங்கள் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். சோடியம் குறைவான உணவு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், கவனமாக இருக்கவேண்டும். இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதை முழு மதிய சாப்பாட்டுடன் சாப்பிடும்போது உங்களுக்கு நன்றாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.