தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Palaappam/vellaiaapam : குழந்தைகளின் ஃபேவரைட் வெள்ளை ஆப்பம்/பாலாப்பம் செய்வது எப்படி?

Palaappam/Vellaiaapam : குழந்தைகளின் ஃபேவரைட் வெள்ளை ஆப்பம்/பாலாப்பம் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jul 25, 2023 11:45 AM IST

Palaappam/Vellaiaapam : குழந்தைகளின் ஃபேவரைட் உணவான பாலாப்பம் அல்லது வெள்ளை ஆப்பம் செய்வது எப்படி? இதோ ரெசிபி!

பாலாப்பம்/வெள்ளையாப்பம் - தேங்காய்ப்பால்
பாலாப்பம்/வெள்ளையாப்பம் - தேங்காய்ப்பால்

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சை அரிசி – 2 கப்

தேங்காய் துருவல் – முக்கால் கப்

வேகவைத்த சாதம் – கைப்பிடியளவு

சோடா உப்பு – சிறிதளவு

சர்க்கரை – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய், சாதம் ஆகியவற்றை முதலில் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், அடுத்ததாக ஊற வைத்த அரிசியை போட்டு அரைக்க வேண்டும். பின்னர் உப்பு, சர்க்கரை அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் அல்லது ஒரு இரவு நன்றாக புளிக்க வைக்க வேண்டும். அந்த மாவு நன்றாக பொங்கியிருக்கும்.

பாலாப்பமாக வார்த்தெடுக்க மாவை தண்ணீர் பதத்தில் கரைத்து ஆப்ப சட்டியில் ஊற்றி எடுக்க வேண்டும். தண்ணீருக்கு பதில் தேங்காய் பாலும் கலந்துகொள்ளலாம். உங்களுக்கு பிடித்ததுபோல் ஆப்பங்களை வார்த்து எடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பம் செய்தவற்கு சிறிது நேரம் முன் சோடா உப்பை கலந்துகொள்ள வேண்டும்.

இந்த மாவில் கோதுமை மாவு கலந்து கோதுமை ஆப்பமும் செய்துகொள்ளலாம்.

ஆப்பத்தின் நடுப்பகுதியில் முட்டையை ஊற்றி முட்டை ஆப்பமும் செய்துகொள்ளலாம்.

ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால், காய்கறி ஸ்டூ, கடலகறி என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்