தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  One Pot Kuruma : பேரே வித்யாசமா இருக்கே, அது என்ன ஒன் பாட் குருமா? – இதோ ரெசிபி!

One Pot Kuruma : பேரே வித்யாசமா இருக்கே, அது என்ன ஒன் பாட் குருமா? – இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Aug 20, 2023 10:31 AM IST

One Pot Kuruma : ஒன் பாட் குருமா என்பது வேறு ஒன்றுமில்லை. அனைத்து காய்கறிகளையும், மசாலாவையும் அரைத்து ஒரே குக்கரில் வைத்து வேகவைத்து எடுப்பது ஒன் பாட் குருமா எனப்படுகிறது. இது டிஃபனுக்கு சிறந்த சைட் டிஷ். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், ஆப்பம் என தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

ஒன் பாட் குருமா செய்வது எப்படி?
ஒன் பாட் குருமா செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – சில துளிகள்

கொத்தமல்லித்தழை – கைப்பிடி அளவு

காய்கறிகள்

ஒன்று முதல் 2 கப் நறுக்கிய காய்கறிகள் உங்களுக்கு தேவை. உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.

கேரட் – 1

உருளைக்கிழங்கு சிறியது – 1

பீன்ஸ் – 8

பச்சை பட்டாணி – கால் கப்

காளிபிளவர் – அரை கப் (ஒரு பூவில் இருந்து இரண்டு அல்லது மூன்று இதழ்களை பிரித்து சிறிதாக கட் செய்துகொள்ள வேண்டும்)

பரங்கிக்காய் – கால் கப்

குடை மிளகாய் – அரை

நூல் கோல் – 1 (சிறியது)

சௌசௌ – 1 கப்

பட்டர் பீன்ஸ் அல்லது உங்கள் விருப்பத்துக்கு ஏதேனும் ஒரு பீன்ஸ் – கால் கப்

(முருங்கை, கத்தரி போன்ற சாம்பாருக்கு உபயோகிக்கும் காய்கறிகளை மட்டும் சேர்த்துவிட வேண்டாம்)

அரைக்க

பச்சை மிளகாய் – 6

இஞ்சி – 1 இன்ஞ்

பூண்டு – 6 பல்

தயிர் – 1 கப்

தேங்காய் – 6 ஸ்பூன்

முந்திரி – 10 தண்ணீரில் ஊறவைத்தது

பொட்டுக்கடலை – 2 ஸ்பூன் ஊறவைத்தது

சோம்பு – 1 ஸ்பூன்

கசகசா – 2 ஸ்பூன்

கொத்தமல்லிப் பொடி – 2 ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்

முழு கரம் மசாலா – பிரியாணி இலை – 1, பட்டை, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, கிராம்பு – 1

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெயை சூடாக்கி, முழு கரம் மசாலா சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒவ்வொரு காய்கறியாக சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் போதியளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய்கறிகளை சேர்க்கும்போது எளிதாக வேகும் காய்கறிகளை கடைசியாக சேர்க்க வேண்டும். கடினமான காய்களை முதலில் சேர்த்து சிறிது நேரம் வதக்கிக்கொள்ள வேண்டும். காய்கறிகள் வெந்தவும், அரைக்ககொடுத்த அனைத்தையும் அரைத்து மசாலா விழுதையும் இதில் சேர்க்க வேண்டும்.

காய்கறிகளுடன், மசாலாவும் சேர்ந்து சிறிது நேரம் வேக விட வேண்டும். தண்ணீர் மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

குக்கர் அடங்கியதும், கொத்தமல்லித்தழை தூவ வேண்டும். கடைசியாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விடவேண்டும் அல்லது நெய் சேர்க்கலாம்.

சுவையான ஒன்பாட் குருமா சாப்பிட தயாரகிவிட்டது.

டிஃபனுடன் பரிமாறலாம். அத்தனை காய்கறிகள் சேர்த்து செய்திருப்பதால், உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்