கல்யாண வீட்டு ரசம் ருசியாக இருப்பதன் ரகசியம் தெரியுமா? இதோ ஃபிரஷ் மசாலா எப்படி செய்வது?
கல்யாண வீட்டு ரசம் ருசியாக இருப்பதன் ரகசியம் என்னவென்று தெரியுமா? இதோ ஃபிரஷ் மசாலா எப்படி செய்வது என்று பாருங்கள்.
ரசம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ரசத்தில் பொதுவாக மிளகு, சீரகம் ஆகியவை சேர்ப்பதால், அது உங்களுக்கு ஜீரணத்தைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் உடலுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கிறது. ரசத்தை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடனடியான ஜீரணமாகிவிடுகிறது. இதனால்தான் ரசத்தை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறோம். குழம்பு சாதம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை ரசம் மட்டுமே கூட போதுமானது. குறிப்பாக காய்ச்சல் வந்தால் ரசம் சாதம் தான் கொடுப்பார்கள். அது அவர்களுக்கு செரிமானத்தை தரும் ஒன்றாகும். அதனுடன் அதில் சேர்க்கப்படும் உட்பொருட்கள் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து காய்ச்சலில் இருந்து விரைவில் விடுபட முடிகிறது. மேலும் பல்வேறு வகை ரசங்கள் வைக்கப்படுகிறது. முடக்கத்தான் ரசம், துளசி ரசம், வெற்றிலை ரசம் என பலவகை ரசங்களும் நம் உடல் உபாதைகளுக்கு மருந்தாகின்றன. மேலும் ரசம் வைப்பது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக்கூடியது ரசம். நாம் வீட்டில் செய்யும் ரசத்தைவிட கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் ரசம் மிகுந்த சுவையானதாக இருக்கும். இந்த ரசத்தை நாம் வீட்டிலும் செய்ய முடியும். அந்த ரகசியத்தை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
வர மல்லி – 2 ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
ரசம் வைக்க தேவையான பொருட்கள்
தக்காளி – 2
நறுக்கிய பூண்டு – 2
கறிவேப்பிலை – 3
புளிக்கரைசல் – கால் கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துவரம் பருப்பு – வேக வைத்து மசித்தது
மல்லித்தழை – சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
கடாயில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கொரகொரப்பாக பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய தக்காளி, பூண்டு பல் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து புளிக்கரைசலை ஊற்றவேண்டும்.
மஞ்சள் தூள், உப்பு, பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள ஃபிரஷ் ரசப்பொடியை தூவவேண்டும். பின்னர் மல்லித்தழை தூவவேண்டும். ரசம் மட்டும் எப்போதும் நன்றாக கொதித்துவிடக்கூடாது. நுரை தட்டி வரும் பதத்திலே இறக்கிவிடவேண்டும்.
கடாயில் நெய்விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வர மிளகாய் கிள்ளி சேர்த்து தாளித்து அந்த ரசத்தில் சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான கல்யாண விருந்து ரசம் தயார்.
சூடான சாதத்தில் சேர்த்து அப்பளம் கூட போதுமானது. எந்த ஊறுகாய் அல்லது உருளைக்கிழங்கு வறுவல், பொரியல், கூட்டு என எதை வைத்து சாப்பிட்டாலும் சுவை அள்ளும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்