பழங்கள் மட்டுமல்ல; லிச்சி விதைகளில் உள்ள ஆச்சர்யமூட்டும் நற்குணங்கள் என்ன? பயன்படுத்தி பலன்பெறுங்கள்!
பழங்கள் மட்டுமல்ல, லிச்சி விதைகளில் உள்ள ஆச்சர்யமூட்டும் நற்குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
லிச்சி பழங்கள் மிகவும் பிரபலமானவை. அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன. அதேபோல் லிச்சி பழத்தின் விதைகளையும் சாப்பிடலாம். அதிலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன. இது உங்களுக்கு செரிமான ஆரோக்கியம் முதல் வீக்கத்தை குறைப்பது வரை உதவுகிறது. இந்த விதைகள் உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் இவற்றை நீங்கள் அளவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி எதையும் நீங்கள் புதிதாக முயற்சிக்கும்போது, முதலில் கொஞ்சமாகப் பயன்படுத்தி பார்த்துவிட்டு, அதை உங்கள் உடல் ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதுபோல் லிச்சி விதைகளில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டு, அதை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
லிச்சி பழங்களை சாப்பிட்டுவிட்டு, நாம் அதன் விதை தூக்கி வீசவே விரும்புவோம். ஆனால், இந்த சுவையான பழத்தின் விதைகளிலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்று தெரிந்துகொண்டால், நாம் என்ன செய்வோம்? லிச்சி பழம் அதன் சுவை மற்றும் சாறு நிறைந்த குணங்களுக்காக புகழ்பெற்றது. அதேபோல் அதன் விதைகளும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.
லிச்சி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா? அதை நாம் ஏன் பயன்படுத்தவேண்டும் என்ற விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட்
லிச்சி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள செல்களில் சேதத்தை அளிக்கும் ஃப்ரி ராடிக்கல்களை அகற்றுகின்றன. இதனால் உங்களுக்கு எண்ணற்ற ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுகின்றன. அதில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் அடங்கும்.எனவே லிச்சி விதைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடல் சேதத்தை ஏற்படுத்துவதில் இருந்தும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
செரிமானம்
உங்களுக்கு செரிமான கோளாறுகள் உள்ளது எனில், அதிற்கு லிச்சி விதைகள் தீர்வுதரும். அவற்றில் உள்ள உட்பொருட்கள், செரிமானக் கோளாறுகளைப் போக்கும். மற்ற வயிறு தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். குறிப்பாக வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். லிச்சி விதைகளில் உள்ள இயற்கை உட்பொருட்கள் வயிறு உபாதைகளை குறைத்து, உங்கள் வயிற்றை அமைதிப்படுத்துகிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக நீங்கள் லிச்சி விதைகளை உட்கொள்ளக்கூடாது.
வீக்கத்தைக் குறைக்கிறது
வீக்கம் உங்கள் உடல் தனக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வழிகளுள் ஒன்று. நாள்பட்ட வீக்கம், உங்களுக்கு நீண்ட நாள் ஆரோக்கிய கோளாறுகளான ஆர்த்ரிட்டிஸ், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும். லிச்சி விதைகளில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
சரும ஆரோக்கியம்
உங்கள் சருமம் இளமையுடன் பளபளப்பாக வேண்டுமா? லிச்சி விதைகளில் சரும ஆரோக்கியத்துக்கு உதவும் உட்பொருட்கள் உள்ளது. அவை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கும். இதனால்தான் வயோதிகம், முகச்சுருக்கம் மற்றும் சருமத்தில் சேதம் ஆகியவை ஏற்படுகிறது. லிச்சை விதைப் பொடியை உங்கள் சருமத்தை பாதுகாக்க பயன்படுத்துவது உங்களுக்கு இளமை தோற்றத்தைதரும். வயோதிகத்தின் அறிகுறிகளைக் குறைக்கும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும்
உங்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் போதிய ஆக்ஸிஜன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டும். லிச்சி விதைகள் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அது உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் சிறப்பான இயங்கவும் உதவும். இதய இயக்கத்துக்கு தேவையான ரத்த ஓட்டத்துக்கு உதவும். இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவும்
லிச்சி விதைகளை சாப்பிடுவதால், உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. இந்த விதைகளை மட்டும் தனியாக பயன்படுத்தாதீர்கள்.
லிச்சி விதைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
லிச்சி விதைகளை பொடியாக பயன்படுத்துவது நல்லது. லிச்சி விதைகளை அப்படியே சாப்பிடக்கூடாது. அதை சரியான முறையில் பதப்படுத்தி எடுத்துக்கொள்ளவேண்டும். கொஞ்சமாக மட்டுமே பயன்படுத்தவேண்டும். நீங்கள் விரும்பினால் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்