முருங்கைக்கீரை தினமுமே சாப்பிட ஏற்றது ஏன் தெரியுமா? எலும்பு, இரும்பு, இதயம் என எண்ணற்ற நன்மைகள் உள்ளது!
முருங்கைக்கீரையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் முருங்கைக்கீரையை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் இருந்து உங்கள் உடலுக்கு இந்த 10 நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னவென்று பாருங்கள். முருங்கைக்கீரை, கிட்டத்தட்ட அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு கீரை, உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. பெண்களுக்கு இரும்புச்சத்து, எலும்வு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு என அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. முருங்கைக்கீரையை தினமும் ஆய்ந்து சமைப்பது உங்களுக்கு கஷ்டம் என்றால், கவலை வேண்டாம். அதை பறித்து, ஒரு பேபப்ரில் கட்டி வைத்துவிட்டால் சில மணி நேரத்தில் தானாகவே உதிர்ந்துவிடும். அதை எடுத்து நன்றாக உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, அன்றாட உணவில் பயன்படுத்தலாம். இதனால் முருங்கையை உணவில் சேர்ப்பது மிகவும் எளிதான ஒன்று. இல்லாவிட்டால் நிறைய ஆர்கானிக் கடைகளில் முருங்கைக்கீரைப்பொடி கிடைக்கிறது. அவற்றை வாங்கிவைத்துக்கொண்டு தினமும் உபயோகிக்கலாம். இப்போது அதில் உள்ள எண்ணற்ற நன்மைகளைப் பாருங்கள்.
உடல் எடை குறைக்க உதவுகிறது
முருங்கைக்கீரையில்உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு அடிக்கடி பசி, அதற்கு நீங்கள் உணவு உட்கொள்ளவேண்டியது தடுக்கப்பட்டு, உங்கள் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது. கூடுதலாக முருங்கைக்கீரைக்கு உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் தன்மை உள்ளது. இதனால், உங்கள் உடல் எடையை குறைக்க இது உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
முருங்கைக்கீரையில் அதிகளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது. எனவே முருங்கைக்கீரை சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. எலும்புப்புரை நோயை தடுத்து, ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எலும்புகளை பராமரிக்கவும், சரிசெய்யவும் இயற்கையாக உதவுகிறது. எனவே, எலும்பு ஆரோக்கியம் மேம்பட முருங்கைக்கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.