Mutton Sukka : மணமணக்கும் மட்டன் சுக்கா – இப்டி செஞ்சு பாருங்க! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்!
Mutton Sukka : மணமணக்கும் மட்டன் சுக்கா, இப்டி செஞ்சு பாருங்க. மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசி நிறைந்தது.
தேவையான பொருட்கள்
மட்டனை ஊறவைக்க
மட்டன் - 1 கிலோ எலும்பில்லாதது
உப்பு - 1 தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் – ஒன்றரை ஸ்பூன்
எலுமிச்சை – அரை பழத்தின் சாறு
இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மட்டன் சுக்கா செய்ய
வேகவைத்த மட்டன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 25
பச்சை மிளகாய் - 2 கீறியது
கறிவேப்பிலை – 4 கொத்து
மிளகு தூள் - 1 ஸ்பூன்
செய்முறை -
பாத்திரத்தில் மட்டன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், சீரகத்தூள், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கலந்து 30 முதல் 60 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவிடவேண்டும். அதிகம் ஊறஊற சுவையும் அதிகம் கிடைக்கும்.
பின்பு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி 4 -5 விசில் வரும் வரை வேகவிடவேண்டும் அல்லது உங்களுக்கு தேவையான அளவு வழக்கமாக கறி வேக வைக்க நீங்கள் விடும் விசில்கள் விட்டுக்கொள்ள வேண்டும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.
பிறகு வேகவைத்த மட்டனை சேர்த்து கலந்து 10 நிமிடம் வறுக்க வேண்டும். இது மட்டன சுக்கா என்பதால், நன்றாக மட்டன் துண்டுகள் தனித்தனியாக வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
இறுதியாக மிளகு தூள் தூவி கலந்து, மல்லித்தழை சேர்த்து இறக்கி பரிமாறவேண்டும். சுவையான மட்டன் சுக்கா சாப்பிட தயாராக உள்ளது.
பிரியாணி, புலாவ், நெய்சோறு, மட்டன் குழம்பு சாதம் என எதற்குவேண்டுமானாலும் சரியான சைட்டிஷ். குழந்தைகளிடம் கொடுத்தால் வெறும் வாயிலே சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். அவர்களுக்கு இது ஸ்னாக்ஸ் போல் இருக்கும்.
இந்த மட்டன் சுக்கா தென்னிந்தியாவின் புகழ்பெற்ற உணவு. இங்கு கொடுக்கப்பட்டுள்ளதுபோல் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.