தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Elumbu Kulambu: ‘அமிர்தம் எல்லாம் இதற்கு கீழே தான்’ சுள்ளுனு மட்டன் எலும்பு குழம்பு செய்வோமா?

Mutton Elumbu Kulambu: ‘அமிர்தம் எல்லாம் இதற்கு கீழே தான்’ சுள்ளுனு மட்டன் எலும்பு குழம்பு செய்வோமா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 08, 2023 10:44 AM IST

மழைழோ, குளிரோ, சளியோ, இருமலோ, மட்டன் எலும்பு குழப்பு சமைத்து சாப்பிட்டால் எல்லாம் தூரமாய் போகும் என்பார்கள்.

மட்டன் எலும்பு குழம்பு
மட்டன் எலும்பு குழம்பு (thendralssamayalarai Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்:

3 டீ ஸ்பின் மல்லி

20 எண்ணிக்கை மிளகு 

அரை ஸ்பூன் சீரகம்

பட்டை இலை ஒன்று

ஏலக்காய் 2

5 கிராம்பு

ஒரு ஸ்பூன் சோம்பு

அரை ஸ்பூன் கல் உப்பு

காய்ந்த மிளகாய் 4

நல்லெண்ணெய்

இஞ்சி சிறிது

5 பல் பூண்டு

200 கிராம் சி.வெங்காயம்

கருவேப்பிலை

தக்காளி 3

அரைக் கிலோ எலும்பு

சிறிது மஞ்சள் பொடி

வீட்டு குழம்பு பொடி அல்லது மட்டன் மசாலா சிறிது

செய்முறை விளக்கம்:

எண்ணெய் இல்லாத சூடான பாத்திரத்தில் மல்லி, மிளகு, சீரகம், பட்டை இலலை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, கல் உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியை போட்டு வறுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை எடுத்து ஆற விட வேண்டும். 

அதன் பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதை சூடாக்க வேண்டும். பின்ன இஞ்சி, பூண்டு இரண்டையும் எண்ணெய்யில் போட வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை போட்டு வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மல்லி இலை போடலாம். அதன் பின் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  முன்பு நாம் வறுத்தெடுத்த மசாலா உடன் கொஞ்சம் தேங்காய் சேர்த்து, வதக்கிய வெங்காயம் உள்ளிட்டவற்றையும் சேர்த்து மிக்ஸில் போட்டு அரைக்க வேண்டும். 

அதன் பின் எண்ணெய் ஊற்றிய பாத்திரத்தில் கொஞ்சம் கல் பாசி கொஞ்சம் போட்டு, கொஞ்சம் கருவேப்பிலை, சிறிது சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். அதன் பின் கால் டீ ஸ்பூன் மஞ்சளும், தேவைக்கு ஏற்பட உப்பு போடவேண்டும். அதன் பின் நறுக்கப்பட்ட தக்காளி துண்டுகளை போட்டு வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எலும்பு துண்டுகளை போட்டு சூடாக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தேவையென்றால் கொஞ்சம் உருளை கிழங்கு சேர்த்து கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் வீட்டு சமையல் பொடி அல்லது மட்டன் மசாலா பொடி சேர்த்து கிளறலாம். 

சிறிது நேரம் கழித்து நாம் அரைத்து வைத்திருந்த மசாலா கலவையை அதனுள் ஊற்றி, குக்கரில் 4 விசில் வைக்கலாம். அதன் பின் குக்கரை திறந்த பார்த்தால் சுவையான சுடச்சுட எலும்பு குழம்பு ரெடி.

WhatsApp channel

டாபிக்ஸ்