தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Murungakkai Chutney: 5 நிமிடத்தில் தயாராகும் முருங்கைக்காய் சட்னி

Murungakkai Chutney: 5 நிமிடத்தில் தயாராகும் முருங்கைக்காய் சட்னி

Aarthi V HT Tamil
Jul 23, 2023 10:57 AM IST

முருங்கைக்காய் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

முருங்கைக்காய் சட்னி
முருங்கைக்காய் சட்னி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருள்கள்

முருங்கைக்காய் - 1

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 5 பல்

சிவப்பு மிளகாய் - 4

கருவேப்பிலை - 1 துளி

தேங்காய் - 100 கிராம்

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முருங்கைக்காய்யை 4 துண்டுகளாக வெட்டி, சூடான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பாதி வெந்தால் போதுமானது.
  • இப்போது அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு வறுக்கவும்.
  • அடுத்ததாக சின்ன வெங்காயம், பூண்டு, சிவப்பு மிளகாய், கருவேப்பிலை போட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம், பூண்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
  • அதற்கு பிறகு அடுப்பை அணைத்து சூடு ஆறிய பிறகு மிக்சியில் சிறிது உப்பு சேர்த்து வதக்கியவற்றை போட்டு அறைக்கவும்.
  • நன்கு பேஸ்ட் போல் இல்லாமல் ஒன்றும் பாதியுமாக அறைத்து கொள்ள வேண்டும்.
  • இறுதியாக வேகவைத்த முருங்கைக்காய்யை உள்ளே இருக்கும் ஃபிள்ஷை எடுத்து அறைத்த கலவையில் போட்டு மிதமாக அறைக்கவும்.
  • இறுதியாக எப்போது தாளிக்கும் வகையில் தாளித்து இட்லி, தோசைக்கு சாப்பிட்டால் அறுமையாக இருக்கும். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்