Morning Quotes : வெளுத்துகட்டவைக்கும் வெள்ளரி தோசை! சிறப்பான, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஃபன்!-morning quotes whitening cucumber dosa excellent delicious and healthy tiffin - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : வெளுத்துகட்டவைக்கும் வெள்ளரி தோசை! சிறப்பான, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஃபன்!

Morning Quotes : வெளுத்துகட்டவைக்கும் வெள்ளரி தோசை! சிறப்பான, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஃபன்!

Priyadarshini R HT Tamil
Sep 11, 2024 05:47 AM IST

Morning Quotes : வெளுத்துகட்டவைக்கும் வெள்ளரி தோசை! சிறப்பான, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஃபன் செய்வது எப்படி பாருங்கள்.

Morning Quotes : வெளுத்துகட்டவைக்கும் வெள்ளரி தோசை! சிறப்பான, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஃபன்!
Morning Quotes : வெளுத்துகட்டவைக்கும் வெள்ளரி தோசை! சிறப்பான, சுவையான மற்றும் ஆரோக்கியமான டிஃபன்!

வெயிலால் ஏற்படும் வேனிற் கட்டிகளுக்கு வெள்ளரி மிகவும் சிறந்தது. இதை பேஸ்டாக்கி உங்கள் சருமத்தில் பூசினால், வேனிற்கட்டிகளை போக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெள்ளரி, கற்றாழை, தயிர் ஆகியவற்றை அரைத்து வேனிற்கட்டிகள் அல்லது வியர்குரு உள்ள இடத்தில் தடவவேண்டும். வெள்ளரியை பாலுடன் அரைத்தும் பூச பலன் கிட்டும். வெள்ளரி செரிமானம் மற்றும் வளர்சிதைக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக கால்சியம் அதற்கு உதவுகிறது. வெள்ளரியில் உள்ள கால்சியச்சத்து செரிமானத்துக்கு மட்டுமல்ல, எலும்புகள் வலுப்பெறவும் உதவுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும், அமைப்புக்கும் உதவுகிறது.

வெள்ளரியில் உள்ள வைட்டமின் பி1, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரியில் உள்ள பொட்டாசியச்சத்துக்கள் தசை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றுகிறது. உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது. இயற்கை எலக்ட்ரோலைட் பானமாகும். வறட்சி, நோய் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காலங்களில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது. வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்கிறது. குறிப்பாக இன்றைய கடும் வெயிலுக்கு ஏற்படும் சன் ஸ்ரோக்கில் இருந்து விடுபட உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த வெள்ளரியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் தோசை செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – ஒரு கப்

வெள்ளரி – 1

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை

வெள்ளரியை தோல் நீக்கி நறுக்கி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை இட்லி மாவில் கலந்துகொள்ளவேண்டும். அதை தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து எடுக்கவேண்டும். சூப்பர் சுவையில் வெள்ளரி தோசை தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், அசைவ கிரேவிகள் என அனைத்தும் சிறந்தது. இதை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

வெள்ளரி தோசையை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். வெயில் காலத்துக்கு ஏற்றது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. எனவே இதை காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது.

ஒரே மாதிரி காலை உணவு அல்லது தோசை செய்து உங்களுக்கு போர் அடித்துவிட்டால், இதுபோன்ற வித்யாசமான தோசைகளை செய்யலாம். இதுபோன்ற பல்வேறு ரெசிபிக்களை ஹெச்.டி‘. தமிழ் உங்களுக்கு வழங்கி வருகிறது. தினமும் ஆரோக்கியமான ரெசிபிக்களை தெரிந்துகொண்டு மகிழ்வுடன் வாழ எங்களை தொடருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.