Benefits of Carrot : உணவில் தினம் ஒரு கேரட் கட்டாயம்! எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்!
Benefits of Carrot : உணவில் தினம் ஒரு கேரட் கட்டாயம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்.
கேரட் பச்சையாகவும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். இதை நாம் பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறோம். இது வண்டுகளுக்கும், முயல் குட்டிகளுக்கும் பிடித்த உணவாகும். குழந்தைகளுக்கு இதை வேகவைத்து மசித்து கொடுப்பார்கள். கண்களில் கண்ணாடியை கழட்ட வேண்டுமென்றால் கேரட்டை தினமும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் வருகையால் நாம் இன்று அதிக கேரட்களை சாப்பிடுவதில்லை. ஆனால் எண்ணற்ற நற்குணங்கள் நிறைந்த கேரட்களை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதிகம் பச்சையாக சாப்பிட்ட உணவுகளில் கேரட்டும் ஒன்று. எனவே நாம் இதை அப்படியே சாப்பிடலாம். கேரட்டில் எத்தனை ஆரோக்கிய நற்குணங்கள் நிறைந்துள்ளது பாருங்கள்.
கண் பார்வையை அதிகரிக்கிறது. மாலை கண் நோயை அடிதது விரட்டுகிறது.
கேரட்டில் உள்ள அதன் அடர் ஆரஞ்சு, சிவப்ப நிறம் அதில் உள்ள பீட்டா கரோடின்களை குறிக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டைப் பயன்படுத்திதான் உடல் வைட்டமின் ஏஆக மாற்றுகிறது. கண் பார்வை ஆரோக்கியத்தை பராமரிக்க கேரட் உதவுகிறது. மாலை கண் நோய் தடுக்கிறது. கண்ணாடி போடாமல் தடுக்கிறது. எனவே உங்கள் உணவில் கேரட்டை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள். அது மங்கலான பார்வையைத் தடுத்து, நீங்கள் கண்ணாடி அணிவதை தடுக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கேரட்டில் உள்ள கரோட்டினாய்ட்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் மற்றும் சருமத்தில் உள்ள அழுக்குகளை அடித்து விரட்டுகிறது. ஃப்ரீ ராடிக்கல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து உங்கள் சருமத்தை இளமைத் தோற்றத்துடன் வைக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது
கேரட்டில் வைட்டமின் பி6 மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இரண்டு வைட்டமின்களும், தொற்றுகளை அடித்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் நோய்கள் உங்களை தாக்காமல் காக்கிறது. வைட்டமின் பி6 உடலில் நோய் எதிர்ப்புத்திறன் உருவாக உதவி தொற்றுக்களுக்குபின்னர் உங்கள் உடல் விரைந்து குணமடைய உதவுகிறது.
செரிமானத்தை தூண்டுகிறது
கேரட்டில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை உருவாக்குகிறது. இது ஆரோக்கியமான குடல் மற்றும் குடலின் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. இதனால் நீங்கள் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடிகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலைப் போக்குகிறது. உப்புசத்தை குறைக்கிறது.
உடல் எடை குறைய உதவுகிறது
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்களுக்கும் கேரட் மிகவும் சிறந்தது. இது நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இது உங்களின் வயிறுக்கு நிறைவான உணர்வைத்தரும். இதனால் நீங்கள் பசியில் அவதிப்பட தேவையில்லை. பசியால் கலோரிகள் அதிகம் கொண்ட ஸ்னாக்ஸ்களை தேடிச் செல்லவேண்டிய தேவையும் இல்லை. இதில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்கள், உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.
உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்கிறது
கேரட்டில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது செரிமான மண்டலத்தில் உள்ள கொழுப்புக்களை ஒன்றுசேர்த்து, ரத்தத்தில் அது சேராமல் தடுக்கிறது. இது உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதற்கு நீங்கள் ஒரு கப் கேரட்டை பச்சையாக சாப்பிடவேண்டும்.
புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது
பல்வேறு வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சிகளையும் கேரட் தடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கிறது
கேரட்டில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியத்துக்கு உகந்தது. இதில் உள்ள வைட்டமின் கே1, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மூளை ஆற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கற்றலை எளிதாக்கவும், கற்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது
கேரட் 90 சதவீதம் தண்ணீரால் நிறைந்தது. இது வெப்பநிலை அதிகரிக்கும்போதும், வழக்கமான உடற்பயிற்சிகளுக்குப்பின்னரும், அதிக எடையை தூக்கும்போது உடல் இழக்கும் நீர்ச்சத்தை மீட்டுத்தருகிறது. எனவே உங்கள் உணவில் கேரட்டை சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அன்றாடம் பருகும் தண்ணீருடன் சேர்த்து கூடுதல் அளவு தண்ணீர் சத்தை கிடைக்கச் செய்கிறது.
வாய் துர்நாற்றத்தைப்போக்குகிறது
கேரட் கடித்து சாப்பிட ஏற்ற உணவு. நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. இது நாக்கில் எச்சில் உற்பத்திக்கு உதவுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் உணவுத் துகள்களை எச்சில் போக்குகிறது. ஈறு நோய்கள் மற்றும் பற்களில் பற்சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது. பற்சிதைவை எதிர்த்து போராடும் நோய்களுள் ஒன்றாக கேரட் உள்ளது. பச்சை கேரட்டை கடித்து மென்று சாப்பிடும்போது அது பற்களுக்கு இயற்கை பிரஷ்ஷாகிறது. இதை மெல்லும்போது உங்கள் ஈறுகளுக்கு மசாஜ் கிடைக்கிறது. வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேகை எதிர்த்து போராடும் கேராட்டின்கள் நிறைந்தது. கேராட்டின்கள் பற்களின் எனாமலை காக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்