Dangerous food combinations: எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? செரிமானத்தில் பிரச்சனைகள் வரும்!
பலர் மீன் உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள் ஆனால் மீனில் புரத சத்து அதிகம் உள்ளது. தயிரில் புரதம், கால்சியம், அயோடின்,பொட்டாசியம்போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா?
டீ குடித்துக்கொண்டே பக்கோடா சாப்பிடுபவர்கள், தயிரில் குழைத்து பரோட்டா சாப்பிடுபவர்கள் அதிகம். இதுபோன்ற பல உணவு சேர்க்கைகள் உள்ளன. உண்மையில், சில வகையான சேர்க்கைகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
வயிற்றில் உள்ள குடல்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. வெகு சிலரே இதை அறிவார்கள். அதனால்தான் பலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான காரத்தை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. சில உணவு சேர்க்கைகள் வயிற்றின் ஆரோக்கியத்தை அழிக்கும். பல ஊட்டச்சத்து நிபுணர்கள் இதை தொடர்ந்து சொல்கிறார்கள்.
இருப்பினும், அவற்றை உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. என்ன உணவு சேர்க்கைகள் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டுபிடிப்போம்.
