Morning Quotes : இந்த காலை உணவு உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; கருப்பு உளுந்து தால் செய்வது எப்படி?-morning quotes this breakfast will improve your gut health how to make black gram flour - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : இந்த காலை உணவு உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; கருப்பு உளுந்து தால் செய்வது எப்படி?

Morning Quotes : இந்த காலை உணவு உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; கருப்பு உளுந்து தால் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 20, 2024 06:00 AM IST

Morning Quotes : இந்த காலை உணவு உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; கருப்பு உளுந்து தால் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Morning Quotes : இந்த காலை உணவு உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; கருப்பு உளுந்து தால் செய்வது எப்படி?
Morning Quotes : இந்த காலை உணவு உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; கருப்பு உளுந்து தால் செய்வது எப்படி?

ஒவ்வொரு முறையிலும் 6 கிராம் நார்ச்சத்துக்கள் மற்றும் ப்ரோபயோடிக்குகள் அல்லது ப்ரீபயோடிக் உணவுகள் கிடைத்து உங்களின் குடல் ஆரோக்கியத்தின் தேவையை பூர்த்தி செய்கின்றன. ப்ரேப்ஃபாஸ்ட் தால் காலை உணவு உங்களை உள்புறமும், வெளிப்புறமும் நன்றாக மாற்றுகிறது.

ப்ரேக் பாஸ்ட் தால்

பருப்பு உங்களுக்கு வயிறுநிறைந்த உணர்வைத்தரும். இதில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் காலைக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இந்த பருப்பை நீங்கள் செய்து வைத்துக்கொண்டு , ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, அந்த வாரம் முழுமைக்கும் ருசித்து மகிழலாம். ஃபீரிசரில் வைத்து ஒரு மாதம் முழுவதும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

நெய் – 6 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 2 ஸ்பூன் (தட்டியது)

பூண்டு – 2 ஸ்பூன் (தட்டியது)

கரம் மசாலா – 2 ஸ்பூன்

மிளகுத்தூள் – அரை ஸ்பூன்

தக்காளி – 2 கப் (பொடியாக நறுக்கியது)

கருப்பு உளுந்து – 2 கப்

உப்பு – தேவையான அளவு

சீரகம் – ஒரு ஸ்பூன்

ஃப்ரஷ் க்ரீம் – அரை கப்

மல்லித்தழை – சிறிதளவு

பிரயாணி இலை – 1

எலுமிச்சை யோகர்ட் செய்ய தேவையான பொருட்கள்

யோகர்ட் – முக்கால் கப்

எலுமிச்சை பழச்சாறு – ஒன்றரை ஸ்பூன்

உப்பு – சிட்டிகை

எலுமிச்சை தோல் – அரை ஸ்பூன் (துருவியது)

செய்முறை

கடாயை சூடாக்கி, மிதமான சூட்டில் நெய்யை உருக்கி, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரையும், வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுத்து கரம் மசாலா சேர்த்து வறுக்கவேண்டும். பின்னர் தக்காளி பிரியாணி இலை சேர்க்கவேண்டும். தக்காளியை நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து அரை மணி நேரம் ஊறவைத்த கருப்பு உளுந்து சேர்த்து தண்ணீர் ஊற்றி அது வேகும் வரை சிம்மில் வைத்து கொதிக்கவிடவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

தனியாக யோகர்ட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் எலுமிச்சை சாறு, துருவிய எலுமிச்சை பழத்தின் தோல், சிறிது உப்பு சேர்த்து கலக்கவேண்டும். இதை ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து, சீரகம் தாளிக்கவேண்டும். அது நன்றாக வறுபட்டு வாசம் வரவேண்டும். சூட்டில் இருந்து எடுக்கவேண்டும்.

பருப்பு கெட்டியானவுடன் அதில் தாளிப்பை சேர்க்கவேண்டும். பின்னர் ஃபிரஷ் கிரீம் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து கலந்து இறக்கினால் தால் தயார். இதை பரிமாறும்போது மல்லித்தழை மற்றும் கலந்து வைத்துள்ள யோகர்ட் கலவை தூவி பரிமாறவேண்டும்.

இந்த உணவை காலையில் எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

இதில் இஞ்சி சேர்க்கப்படுவதால், உங்கள் வயிற்றுக்கு நல்லது. மேலும் இஞ்சி மூட்டு வலியை குணப்படுத்துகிறது.

தக்காளியை சமைக்கும்போது, அதில் உள்ள லைன்கோபென் தன்மை அதிகரிக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் இதய நோய்களை குணப்படுத்துகிறது. வீக்கத்தை குறைக்கிறது, தமனியில் ப்ளேக் சேராமல் காக்கிறது.

பூண்டில் எண்ணற்ற நற்குணங்கள் உள்ளது. இதில் உள்ள அலிசின் என்ற சல்ஃபர் கலந்த உட்பொருள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. பூண்டு ஒரு ப்ரீபயோடிக் உணவு என்பதால், இது உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது.

பருப்பில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள், உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலைக்கொடுக்கிறது. உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

குறிப்புக்கள்

பருப்பை சமைக்கும்போது அடுப்பு எப்போதும் சிம்மில் இருக்கவேண்டும். அப்போதுதான் அதன் ஊட்டச்சத்துக்கள் காக்கப்படும்.

சீரகத்தை எப்போதும் தாளிக்கப் பயன்படுத்துவது உணவின் சுவையை அதிகரிக்கும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.