Side Effects Of Eating Too Much Apples: நீங்கள் தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்வது நல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்வதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்ற வார்த்தைகளை ஆப்பிளைப் பற்றி பேசும் போது எல்லாம் நாம் கேள்விப்படுகிறோம். குழந்தை பருவத்திலிருந்தே, ஆப்பிள் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பல நன்மைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.
Pexels
ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ஆப்பிள் நுகர்வு அனைவருக்கும் பயனளிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சிலர் ஆப்பிள்களை கவனமாக உட்கொள்ள வேண்டும். ஆப்பிளை அதிகமாக உட்கொள்வது நன்மை பயப்பதற்கு பதிலாக அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் ஆப்பிள்களை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
Pexels
சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் சரும அரிப்பு, தடிப்புகள் மற்றும் வீக்கம் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களுக்கு ஆப்பிள் சாப்பிட ஒவ்வாமை இருந்தால், அதை உட்கொள்வதை உடனே தவிர்த்து விடுங்கள்.
Pexels
உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆப்பிளில் உள்ள அதிக அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை உங்கள் எடையை மேலும் அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், குறைந்த அளவில் ஆப்பிள்களை சாப்பிடுவது உங்கள் உடல் குறைப்பு முயற்சிக்கு பலன் தரும்.
Pexels
வயிற்று போக்கு பிரச்சசனை உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடக்கூடாது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக ஆப்பிளை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படலாம்.
Pexels
நீரிழிவு நோயாளிகளும் ஆப்பிளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஆப்பிள்களில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆப்பிளை உட்கொள்ள வேண்டும்.
Pexels
செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள்களை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆனால் ஆப்பிளை அதிகமாக உட்கொண்டால், அது வாயு, வயிற்று வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும்.
Pexels
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. அதேபோல் தான் ஆப்பிளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. சராசரியாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு ஆப்பிள்களை சாப்பிடலாம். இதை விட ஆப்பிள்களை அதிகம் சாப்பிட்டால், உங்கள் உடல் நலம் பாதிக்கப்படும்.