Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்ங்க!-morning quotes need to keep your brain active then do all this - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்ங்க!

Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்ங்க!

Priyadarshini R HT Tamil
Sep 28, 2024 06:00 AM IST

Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்யுங்கள் போதும். உங்களின் நினைவாற்றல் முதல் மனத்தெளிவு வரை உதவும்.

Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்ங்க!
Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்ங்க!

மூளையை வலுப்படுத்தும் ஆயுர்வேத முறை

ஆயுர்வேதம் என்பது மூளையை சுறுசுறுப்பாக்கும் ஒரு பொக்கிஷம் ஆகும். இது உங்களின் மூளையை ஷார்ப்பாக்கும் எண்ணற்ற விஷயங்களைக்கொண்டுள்ளது. அஷ்வகந்தா, சங்குப்பூ, பிரம்மி மற்றும் வல்லாரைக்கீரை ஆகியவற்றை பயன்படுத்தி மூளையை ஷார்ப்பாக வைத்திருந்தார்கள். மேலும் மூளையை ஷார்பாக்கும் மூலிகை தீர்வாக நினைவாற்றல், மனநிலையை அதிகரிக்கச் செய்யும் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள்.

மந்திரங்கள் ஓதுவது

மூளையை சுறுசுறுப்பாக்க மந்திரங்கள் ஓதுவது மிகவும் அவசியம். ஓம், காயத்திரி மந்திரம் ஆகியவற்றை ஓதும்போது அது மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். இதை மீண்டும், மீண்டும் கூறும்போது, உங்கள் நரம்பியல் வழிகள் சுறுசுறுப்பாகும், கவனம் அதிகரிக்கும் மற்றும் மனஅழுத்தம் குறையும்.

தியானம்

தினமும் தியானம் செய்யும்போது உங்களின் டென்சன் குறையும், உங்களின் கவனம் அதிகரிக்கும். தியானத்தை வழக்கமாக்கினால், அது உங்களின் மனதை அமைதியாகவும், தெளிவாகவும் வைத்திருக்கும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

யோகா

உங்கள் உடலுக்கு அதிகப்படியான ஆற்றலைக் கொடுக்க வல்லது யோகா. உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மா என அனைத்தும் ஆசனங்கள் என்ற உடலின் போஸ்சர்கள் வழியாக உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும். பிராணயாமம் போன்ற மூச்சை அடக்கும் பயிற்சிகளும் உதவும். யோக நிலைகள் குறிப்பாக பத்மாசனம், சர்வாங்காசனம் போன்றவை உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்பவையாகும். இது மூளைக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உங்களின் மனத்தெளிவு மற்றும் எச்சரிக்கை உணர்வை அதிகரிகரிக்கச் செய்யும்.

மெழுகுவர்த்தியை உற்றுப்பார்த்தல்

உங்களின் மூளையின் ஆற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனில், நீங்கள் மெழுகுவர்த்தியை உற்றுப்பார்ப்பது உதவுகிறது. இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கும் ஒரு சிறந்த வழியாகும். பண்டையகால பழக்கவழக்கமான இந்த முறை ஒருவரின் பார்வையை ஒரு நிலையான பொருளின் மீது குறிப்பாக மெழுகுவர்த்தியின் ஒளி மீது நிலைக்கச் செய்ய உதவுகிறது. இது உங்களின் பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்யும். உங்கள் மூளையின் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்வதால் இது நடக்கிறது.

பிராணயாமம்

பிராணயாமம் அல்லது மூச்சை அடக்கும் பயிற்சி என்பது உடல் மற்றும் மனதில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் வழிகளுள் ஒன்றாகும். இது உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரிக்கச்செய்யும். சில பிராணயாம முறைகள், உங்களுக்கு பெரும் மனத்தெளிவை ஏற்படுத்தும்.

வாசிப்பு

வாசிப்பு பழக்கம் உங்கள் மூளையை சுறுசுறுப்படையச் செய்யும். பண்டைய கால இலங்கியங்களை வாசிப்பது உங்களின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். நீங்கள் அதற்கு வாசிக்க தேர்ந்தெடுக்கும் நூல்கள் சங்க இலக்கியங்களாக இருப்பது நல்லது. இதனால் உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பு கிடைக்கும். இந்தப் பயிற்சிகள் உங்களின் பேச்சாற்றல் திறனை வளர்க்கும். மூளையை ஷார்ப்பாக்கும். கிரிட்டிக்கல் சிந்தனையை வளர்க்கும்.

முத்திரைகள்

முத்திரைகள் என்பது கைகளில் உள்ள விரல்களைப் பயன்படுத்தி வைக்கக்கூடியது. இது உங்களின் உணர்வுகளை முறைப்படுத்தும். யோகா, தியானம் மற்றும் முத்திரைகள் அனைத்தும் நீங்கள் உடல் மற்றும் கைகளை வைத்து செய்யக்கூடியது. உடலில் ஆற்றலை வழிந்தோடச் செய்யும். ஞான முத்திரை என்பது மூளையை தூண்டும் நரம்பு கைகளில் முடிவதுடன் தொடர்புடையது. இது உங்களின் நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இசை

இசை மற்றும் ஒலிகள் உங்களின் மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. குறிப்பாக ராகங்கள், இந்திய பாரம்பரிய இவை மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில ராகங்கள், குறிப்பாக பைரவி ராகம் உள்ளிட்டவை உங்கள் மனதை அமைதிப்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்பவையாகும். இவை கிரியேட்டிவிட்டியையும் வளர்க்கும்.

வேத கணிதம்

பழமையான கணித முறை வேத கணிதம் என்று அழைக்கப்பட்டது. அது கணக்குகளை தீர்க்கும் பழங்கால முறையாகும். இது மூளையில் கணக்குகளைப் போடவைக்கும் திறன் பெற்றது. இது உங்கள் மூளையின் லாஜிக்கல் சிந்தனைகள் மற்றும் பகுப்பாய்வு சிந்தனைகளை வளர்க்கும் திறன் கொண்டது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.