Moring Motivations : பணியிடத்தில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திரங்கள் இவைதான்! வேலையை எளிமையாக்கும்!-moring motivations these are the mantras that will make you happy at work makes work easier - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moring Motivations : பணியிடத்தில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திரங்கள் இவைதான்! வேலையை எளிமையாக்கும்!

Moring Motivations : பணியிடத்தில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திரங்கள் இவைதான்! வேலையை எளிமையாக்கும்!

Priyadarshini R HT Tamil
Aug 18, 2024 05:44 AM IST

Moring Motivations : பணியிடத்தில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திரங்கள் இவைதான், உங்களின் வேலையை எளிமையாக்கி மனஅழுத்தத்தை குறைத்து, மனநிறைவை ஏற்படுத்தும்.

Moring Motivations : பணியிடத்தில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திரங்கள் இவைதான்! வேலையை எளிமையாக்கும்!
Moring Motivations : பணியிடத்தில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திரங்கள் இவைதான்! வேலையை எளிமையாக்கும்!

மகிழ்ச்சியான தருணங்கள்

இன்றைய பரபரப்பான நாளில், பரபரப்பான சூழலில், ஒட்டுமொத்த நலன் மற்றும் மகிழ்ச்சியுடன் ஒரு நபர் வாழ்வதே சவாலான ஒன்றுதான். சந்திப்புகள், காலக்கெடு என தொடர்ந்து நீங்கள் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும். எது உண்மையில் தேவை என்பது உங்களுக்கு தெரியாமலே போகலாம்.

எனினும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரங்களை பின்பற்றினாலே போதும், உங்கள் பணியிடத்தில் நீங்கள் மகிழ்ச்சியையும், வாழ்வில் சமநிலையையும் கொண்டுவர முடியும். பணியிடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கச் செய்யும் மந்திரங்கள் இவைதான்.

சிறப்பான பணியைவிட பணி-வாழ்க்கை சமநிலைக்கு முக்கியத்துவம்

ஒரு வேலையை சிறப்பாக நீங்கள் செய்யவேண்டும் என்பது கட்டாயம்தான். ஆனால் அனைத்து வேலைகளையும் சிறப்பான முறையில் செய்யவேண்டும் என்பது உங்களுக்கு திருப்தியின்மையையும், சில நேரத்தில் ஆற்றாமையையும் ஏற்படுத்தும். எனவே பணி மற்றும் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேணவேண்டும்.

அனைத்து பணிகளிலும் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியாது சரிதான் என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் நீங்கள் பணி – வாழ்க்கை சமநிலையை நீங்கள் கடைபிடிக்கும்போது, உங்களால், மகிழ்ந்திருக்க முடியும். உங்களின் தினசரி நடவடிக்கைகளில் நீங்கள் மகிழ்ந்திருக்கலாம் மற்றும் தேவையற்ற மனஅழுத்தத்தை குறைக்கலாம்.

நெகிழ்தன்மை மற்றும் ஏற்கும்திறன்

பணியிடங்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்பவை. அவற்றை ஏற்பது நீண்ட கால மகிழ்ச்சிக்கு மிகவும் அவசியம். மாற்றங்களை வாழ்வில் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பாருங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது உதவக்கூடும். அதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.

அதேநேரத்தில் நீங்கள் நெகிழ்தன்மையுடன் இருக்கவேண்டும். புதிய யோசனைகளை வரவேற்க வேண்டும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டும். உங்களின் பணியிடத்தின் கட்டுப்பாடும் உங்கள் கைகளில் இருக்கவேண்டும்.

நன்றி

உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க வேண்டுமெனில், தினமும் சிறிது நேரம் ஒதுக்கி நீங்கள் எதற்காக நன்றி கூறுகிறீர்கள் என்பதை மனதில்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

உங்களுக்கு உறுதுணையாக உடன் பணிபுரிபவர்கள், ஒரு நல்ல ப்ராஜெக்ட், உங்களுக்கு கிடைத்த வேலைக்கு நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதற்கு நன்றி கூறுவது, ஒரு நேர்மறையான மனநிலையை ஏற்படுத்தும். அதை நீங்கள் அங்கீகரிக்கும்போது, உங்கள் மனநிலை மனஅழுத்தத்தில் இருந்து மனநிறைவுக்கு மாறும்.

எல்லைகளை வகுத்து, அதை மதிக்க வேண்டும்

நீங்கள் அதிகப்படியான பணிகளால், உடைந்துபோகாமல் இருக்கவேண்டுமெனில், உங்களுக்கென்று தெளிவான எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் இது அவசியம்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் இமெயில்களை பார்ப்பதில்லை முதல் நாள் முழுவதும் வழக்கமான இடைவெளியை எடுத்துக்கொள்வது வரை நீங்கள் எல்லை வகுத்துக்கொண்டு, அதை நீங்கள் பின்பற்றினாலே போதும். அது உங்களின் நலனுக்கு உதவும். உங்கள் தனிப்பட்ட நேரத்தை பாதுகாத்தலே உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். பணியின்போது நீங்கள் அதிக வேலை செய்ய முடியும்.

தொடர் கற்றல்

வாழ்நாள் முழுவதும் நீங்கள் கற்றுக்கொண்டே இருந்தால்தான் நீங்கள் பணியிடத்தில் மகிழ்ந்திருக்கலாம். எனவே தொடர்ந்து வாய்ப்புக்களை பாருங்கள். புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அறிவை தேடிப்பெறுங்கள்.

இது உங்கள் மூளையை மட்டும் ஷார்ப்பாக வைத்திருக்க உதவாது. இது உங்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கவும், உங்களின் பணியில் உங்களை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சி பணியிடத்தில் திருப்தியையும், உங்கள் பணி வாழ்க்கையை நிறைவானதாகவும் மாற்றும்.

பணியிடத்தில் அர்த்தமுள்ள உறவுகள்

உங்கள் உடன் பணிபுரிபவர்கள், நேர்மறையான சிந்தனைவாதிகளாக இருந்தால், அது உங்கள் பணியிடத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். எனவே பணியிடத்தில் நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் குழுவினருக்கு ஆதரவு கொடுங்கள். ஒரு நல்ல ஒற்றுமையான பணிச்சூழலை வளர்த்தெடுங்கள். நீங்கள் யாருடன் சேர்ந்து பணிபுரிகிறீர்களோ அவர்களுடன் நல்ல உறவை பேணி வளர்த்தால், உங்களின் பணி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். மனஅழுத்தமும் குறையும்.

நீங்கள் எதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்

எந்த பணியிடத்திலும், சில விஷயங்கள் உங்களின் கட்டுப்பாட்டை மீறியிருக்கும். அதை பார்த்து உங்களின் ஆற்றலை வீணாக்கிவிடாமல், உங்களின ஆற்றலை நீங்கள் எதில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதில் செலவிடுங்கள். உங்களின் முயற்சிகளை பணிகள் மற்றும் சவால்களை நோக்கி செலுத்தினால், உங்களால் எதையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நீங்கள் அதிக அதிகாரம் பெற்றவராக உணரமுடியும்.

சிறிய வெற்றிகளை கொண்டாடுங்கள்

பெரிய மைல்கற்களுக்காக காத்திருக்க வேண்டாம். சிறிய வெற்றிகளைக் கூட கொண்டாட வேண்டும். சிறிய வெற்றிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். தினமும் கிடைக்கும் சிறிய வெற்றிகளை நீங்கள் கொண்டாடுவது உங்களின் உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

சரியான நேரத்தில் வேலையை முடிப்பது அல்லது புதிய விஷயங்களை கற்பது அல்லது உங்கள் உடன் பணிபுரிபவருக்கு உதவுவது அல்லது இந்த தருணங்களை கொண்டாடுவது உங்களின் மகிழ்ச்சியை அதிகரித்து, உற்சாகப்படுத்தும்.

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.