Morning Quotes : மனதை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யவேண்டுமா? இந்த 8 வழிகள் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : மனதை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யவேண்டுமா? இந்த 8 வழிகள் போதும்!

Morning Quotes : மனதை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யவேண்டுமா? இந்த 8 வழிகள் போதும்!

Priyadarshini R HT Tamil
Sep 27, 2024 06:00 AM IST

Morning Quotes : மனதை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யவேண்டுமா? எனில் இந்த 8 வழிகளை நீங்கள் பின்பற்றினால் போதும்.

Morning Quotes : மனதை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யவேண்டுமா? இந்த 8 வழிகள் போதும்!
Morning Quotes : மனதை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யவேண்டுமா? இந்த 8 வழிகள் போதும்!

அன்றாட உடற்பயிற்சி

உங்களின் உடலை நீங்கள் அசைக்கும்போது, குறிப்பாக உடற்பயிற்சிக்காக அசைக்கும்போது, அது உங்கள் மனநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் பயிற்சியின்போது எண்டோர்ஃபின்கள் வெளியாகும். இவை உங்கள் மனமகிழ்ச்சிக்கு உதவக்கூடிய ஹார்மோன்கள் ஆகும். ஒரு நடைப்பயிற்சியோ அல்லது யோகாவோ அல்லது ஜிம் செல்வதோ உங்களின் மனஅழுத்தத்தை குறைக்க உதவும். உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நன்றி

வாழ்வில் உங்களுக்கு கிடைத்த சிறு விஷயங்களுக்காக நீங்கள் நன்றியுடன் நடந்துகொள்வது உங்களின் கோணத்தை மாற்றும். நன்றி உங்களின் கவனத்தை எது குறைவாக உள்ளது என்பதில் இருந்து எது நல்லது என்பதற்கு மாற்றும். எனவே நீங்கள் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் உங்களின் மனமகிழ்ச்சியை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான உணவு மற்றும் சுகாதாரமான உணவு

நாம் உண்ணும் உணவு நாம் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறோமா என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தமான உணவை நாம் உட்கொள்ளும்போது, அது நமது உடல் நன்றாக இயங்க தேவையான ஆற்றலைத் தருகிறது. இதனால் உங்கள் உடல் நன்றாக இயங்குகிறது. அது உங்கள் மனநிலை மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.

அமைதியான காலை நடையுடன் உங்கள் நாளை துவங்குங்கள்

நாம் அமைதியான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், நீங்கள் காலையில் ஒரு நடைப்பயிற்சி செய்யலாம். அது அதிகாலையில் செய்யும் ஒரு பயிற்சியாக இருக்கவேண்டும். இது உங்கள் மனதில் அமைதி மற்றும் தெளிவை உருவாக்கும். நீங்கள் வெளியே செல்லும்போது புத்துணர்வான காற்று கிடைக்கும். சூரியனின் இதமான சூடு கிடைக்கும். இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

வீட்டில் இருந்து பணி

வீட்டிலிருந்து பணி செய்வது பெரும்பாலானோருக்கு மகிழ்வைத் தருகிறது. இதனால் அவர்களுக்கு அதிகளவு சவுகர்யங்களும், கட்டுப்பாடுகளும் உள்ளது. இது அவர்களுக்கு சிறந்த பணி மற்றும் வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்துகிறது. அவர்களால் அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிட முடிகிறது. டேலும் இதனால் அவர்களின் வேலைகளிலும் அவர்களுக்கு நெகிழ்தன்மை கிடைக்கிறது.

தியானம்

உங்களுக்கு தெளிவான சிந்தனைகள் ஏற்படவேண்டுமெனில், உங்கள் உள் மனதுடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டுமெனில், அதற்கு தியானம் உதவும். மனஅழுத்தம் மற்றும் பதற்றம், இரண்டும், சிறிது நேரத்தை செலவிடுவதாலே குறையும். ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த தியானம் மற்றும் மனநிறைவுடன் இருக்கவேண்டுமெனில் அதற்கு தியானம் சிறந்த கருவி.

அதிக உறக்கம்

நல்ல ஆழ்ந்த இரவு உறக்கம் உங்கள் மன மற்றும் உணர்வு ரீதியான நலனுக்கு மிகவும் முக்கியம். நாம் அடிக்கடி செய்ய மறக்கும் வேலையாகவும் உள்ள ஒன்றுதான், தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக உறங்குவது உங்கள் மனநிலையை மாற்றும் தன்மைகொண்டதாக உள்ளது. போதிய ஆழ்ந்த உறக்கம் கொள்பவர்கள், ஒரு விஷயத்தின் பிரகாசமான பகுதியைக் காண்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை சிறப்பாக கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்.

உங்களைச் சுற்றி நேர்மறையான மக்கள்

உங்களைச் சுற்றி நேர்மறையான அல்லது ஆதரவான மக்களை வைத்துக்கொள்வது உங்கள் நேர்மறையான எண்ணத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. நேர்மறை ஆற்றல் என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ்களைவிட வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. எனவே நீங்கள் உங்களை உயர்த்தும் மக்களை உங்களைச் சுற்றி வைத்துக்கொண்டால், அது உங்களின் மகிழ்ச்சியை இயற்கையாகவே உயர்த்தும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.