Morning Quotes : குழந்தை வளர்ப்பில் அம்மாக்கள் செய்யக்கூடிய தவறுகள்! அவர்களின் வாழ்க்கையையே புரட்டிபோட்டுவிடும்!
Morning Quotes : குழந்தை வளர்ப்பில் அம்மாக்கள் செய்யக்கூடிய தவறுகள் என்னவென்பதையும் தெரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையையே புரட்டிபோட்டுவிடும் அவற்றை செய்யாமல் இருக்கவேண்டும்.
குழந்தைக வளர்ப்பில் அம்மாக்கள் செய்யக்கூடிய இந்த சிறுசிறு தவறுகள்தான் அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதை பெரும்பாலான அம்மாக்கள் செய்து விடுகிறார்கள். அது என்னவென்று தெரிந்துகொண்டு, திருத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அது குழந்தையின் வாழ்வில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். அனைத்து அம்மாக்களுக்கும் பேரன்டிங் என்பது மிகவும் சவாலான பயணம்தான். அதில் பாராட்டுகளும், வசவுகளும் கிடைக்கும். அதிகம் வசவுகள்தான் கிட்டும். ஏனெனில் இது அத்தனை எளிதான பயணம் அல்ல. அம்மாக்களும் சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் பொறுப்புக்களையும், இளம் குழந்தைகளை வளர்த்தெடுத்து, அவர்களை அக்கறையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற இரண்டையும் சமமாக பாவிக்கிறார்கள். தெரியாமல் அம்மாக்கள் செய்யும் இந்த தவறுகள் குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்றும், அவற்றை நீங்கள் எப்படி தவிர்க்கலாம் என்றும் பாருங்கள்.
அதிக பாதுகாப்பு
சில அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை அனைத்து கடின காலங்கள் மற்றும் பிரச்னைகளில் இருந்து அதிகம் பாதுகாக்கிறார்கள். அதற்காக கடும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். அம்மாக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். ஆனால் அதிகம் அவர்களை பாதுகாப்பது என்பது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். அவர்கள் பிரச்னைகளில் இருந்து மீண்டு எழும் திறனைக் குறைக்கும். அவர்களின் சுதந்திரத்தையும், பிரச்னைகளை தீர்க்கும் திறனையும் பாதிக்கும்.
உணர்வு
சில அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் தேவைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் அவர்களின உளத்தேவையை அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். குழந்தைகளுக்கு அவர்களை புரிந்துகொள்ளவும், அவர்களின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்கவும் ஆட்கள் வேண்டும். உணர்வு ரீதியாக அவர்கள் வளர்வது, அவர்களின் கவலைகள் மற்றும் உணர்வுகள் குறித்து நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள் அதற்கு எத்தனை நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பதை பொறுத்து உள்ளது.
சுய அக்கறை
குழந்தைகளின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அம்மாக்கள், அவர்களின் தேவைகளை கவனிக்காமல் விடுவதால் எளிதில் எரிச்சலடைந்து விடுகிறார்கள். எனவே சுய அக்கறை என்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் அது உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் இதனால் உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதையும் நீங்கள் செய்ய முடியாது.
அவமதித்தல்
உங்கள் குழந்தைகளிம் சிறந்த உரையாடலில் ஈடுபடுங்கள். அவர்களை பொது இடங்கள் மற்றும் வீட்டிலும் அவமதிப்பதால் ஒன்றும் நடந்துவிடாது. எனவே குற்றஉணர்வில் இருக்கும் குழந்தைகள் குழம்ப வாய்ப்பு உள்ளது. எனவே தங்கள் அம்மாக்களின் உணர்வுகள் என்ன என்பது அவர்களுக்கு தெரியவேண்டும்.
ஒப்பீடு
உங்கள் குழந்தையின் வளர்ச்சியை நீங்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. இது தேவையற்ற அழுத்தத்துக்கும், அவர்களின் தன்னம்பிக்கை குறித்த எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கான தனிப்பட்ட தேர்வுகளைக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையை அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். எதிர்பார்ப்புக்களை விட அவர்களை அங்கீகரிப்பது அவசியம்.
எல்லைகள்
சில அம்மாக்கள் தெளிவான எல்லைகளை தங்கள் குழந்தைகளுக்கு வகுப்பதில்லை. எனினும், குழந்தைகளுக்கு எல்லைகள் வகுப்பதில் சுயகட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு உணர்வை வளர்த்தல், தொடர் தண்டனை, விதிகள் என அவர்களுக்கு தேவைப்படுகிறது.
மைக்ரோமேனேஜிங்
உங்கள் குழந்தையின் நட்பு, வீட்டுப்பாடம் என ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் சுயத்தை கட்டுப்படுத்த விரும்பினால், அது அவர்களுக்கு தீங்காக அமையும். ஒரு குழந்தை தானாக வளர வேண்டுமென்பது, ஒரு குழந்தை தவறுகள் செய்து அதில் இருந்து பாடங்கள் கற்பதில்தான் இருக்கிறது.
எப்போதும் முதலிடம்
உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் கொள்ளும் எதிர்பார்ப்புகள் அனைத்தும், அவர்களுக்கு அழுத்தத்தை தரும். இதனால் அவர்களுக்க மனஅழுத்தம் ஏற்படும். அவர்களால் முடியவில்லையென்றால் துவண்டு போவார்கள். எனவே அவர்களுக்கு உற்சாகமும், அவர்களின முயற்சிகளுக் பாராட்டும் கொடுப்பது அவசியம். அவர்கள் இடறி விழலாம். ஆனால் அவர்கள் அனைத்தையும் சரியாக மட்டுமே செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்தும்.
தொடர்புடையை செய்திகள்