தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: ஏப்ரல் 7 - தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி கொள்ளாதீர்கள்

Today Rasipalan: ஏப்ரல் 7 - தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி கொள்ளாதீர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 07, 2023 05:30 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். சுவாதி. உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்
12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்

நட்புகளால் குடும்பத்தில் சண்டை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவு செய்ய நேரிடும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வளர்ச்சி அடைவார்கள். உடல் உஷ்ணத்தால் கட்டி வந்து அவதிப்படலாம்.

ரிஷபம்

எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வெளியூர் பயணங்களில் ஆதாயம் உண்டு. ஆன்லைன் வர்த்தகத்தால் எதிர்பார்த்த பலனை தராது. அரசாங்கம் தொடர்பான வேலைகளில் வெற்றி நிச்சயம்.

மிதுனம்

பங்குச் சந்தை வியாபாரத்தில் சற்று பாதகத்தை காண்பீர்கள். கூட்டு தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் பெயரை காப்பாற்ற கடுமையாக பாடுபடுவீர்கள். பங்கு சந்தை வர்த்தகம் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

கடகம்

சிறு வியாபாரிகள் சிறப்பான லாபத்தை பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்த முயற்சிப்பீர்கள். முதலீடுகளுக்கு ஏற்ப லாபம் கிடைக்கபெறுவீர்கள். ஐடி துறை ஊழியர்கள் பனி சிறப்பாக அமையும்

சிம்மம்

வெளியூர் பயணங்களில் உடமைகளை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள்.நெருக்கமானவர்களின் எதிர்வினை எரிச்சலை ஏற்படுத்தலாம். தேவையில்லாத பிரச்னைகளில் வலிய சென்று மாட்டிக்கொள்ள வேண்டும்.

கன்னி

போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். தொழிலுக்கு எதிராக இருந்தவர்களே தேடி வந்து உதவலாம். திடீர் பயணம் மேற்கொள்ளலாம். ஆன்லைன் வர்த்தகத்தில் எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்கும்.

துலாம்

கடன் வாங்குவதை கட்டாயம் தவிருங்கள். வியாபாரத்தில் போதிய லாபம் இல்லாமல் ஏமாற்றம் அடைவீர்கள். துணையின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். அடுத்தவர் வார்த்தையை நம்பி எந்த காரியத்தில் இறங்க வேண்டாம்

விருச்சிகம்

நல்லது செய்தாலும் கெட்ட பெயர் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் கணிவாக நடந்துகொள்ளுங்கள். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும். உங்களது நடவடிக்கையால் மனைவி கோபம் கொள்ளலாம்.

தனுசு

தொழிலில் எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி பெறுவீர்கள். வருமானத்தை பெருக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கும். மருத்துவர்கள், இன்ஜினியர்கள், எலெக்ட்ரிசியன்கள் உயர்ந்த வருமானத்தை அடைவீர்கள்.

மகரம்

தடைபட்டிருந்த திருமணப் பேச்சுவார்த்தை தொடரும். தந்தையாரோடு இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். உடல் உபாதைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

கும்பம்

நம்பி வருவோருக்கு தாராளமாக உதவி செய்வீர்கள். நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை வாங்குவீர்கள்.மனைவி கேட்ட பொருளை வாங்கிகொடுத்து மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மீனம்

நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்காது. இனம் தெரியாத கவலை வந்து போகும். சாப்பாடு விஷயத்தில் கவனம் தேவை. உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். சந்திராஷ்டமம் நாள் என்பதால் அனைத்து விஷயத்திலும் நிதானம் தேவை.